பள்ளி மாணவர்களுக்கான nexus 2025 அறிவியல் கண்காட்சி நடைபெற்றது!!
கோவை: கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் நுண்ணறிவு அமைப்பு மற்றும் தரவு அறிவியல் புலம் கணினி அறிவியல் மற்றும் தரவுப் பகுப்பாய்வுத் துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான nexus 2025 அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கல்லூரியின் முதல்வர் முனைவர் பி கீதா பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை வெளிக்கொணர்வதை முதன்மையான நோக்கமாகக் கருதி இந்நிகழ்வு நடத்தப்படுகிறது எனக்கூறி தலைமையுரையாற்றினார். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கூகுள் வளர்ச்சி நிபுணர் கமல் ஸ்ரீ சவுந்தர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தயாரித்த அறிவியல் கண்டுபிடிப்புகளை சிறப்பு விருந்தினர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் பார்வையிட்டனர். பெங்களூரு டெலைட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டாளர் (HR) என்.கருணாகரன் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்வில் 375 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர் குழுக்கள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். மாணவர்கள்,பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் கல்லூரி அலுவல்நிலைப் பணியாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments