பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் கொண்டாட்டம்!!

கந்தர்வக்கோட்டை செப் 15 : கந்தர்வக்கோட்டை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் வாசிப்பு இயக்கத்தின் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் கொண்டாட்டம்.



நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் வாசிப்பு மன்றத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமத்துல்லா பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தினம் குறித்து பேசும்பொழுது 

பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 15, 2025) கொண்டாடப்படுகிறது.

அறிஞர் அண்ணா (சி.என். அண்ணாதுரை), 15 செப்டம்பர் 1909 அன்று காஞ்சிபுரம் அருகே சின்ன காஞ்சிபுரத்தில் பிறந்தவர். இவர் தமிழகத்தின் ஆறாவது முதல்வராக 1967 ல் பதவியேற்றார்.

அவரது ஆட்சி காலத்தில் "மெட்ராஸ்" என்ற பெயர் "தமிழ்நாடு" என மாற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம், சாதி முறையை உடைக்கும் பணிகள், இந்தி எதிர்ப்பு இயக்கம் போன்றவற்றில் முக்கிய பங்கு வகித்தார்.

தமிழ், ஆங்கிலம் இரு மொழிக் கொள்கையை தமிழகத்தில் வேரூற்றினார்.

சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி,

தனது ஆட்சிக் காலத்தில் நவீன தமிழ்நாட்டிற்கான அடித்தளத்தை இட்டார். சிறந்த எழுத்தாளரான அண்ணா எழுதிய முக்கிய நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் பல்வேறு வகைகளில் உள்ளன.

அண்ணாவின் கட்டுரை நூல்கள்

என் வாழ்வு,

புன்னகை,

செங்கரும்பு,

அறுவடை,

பாரதம் ஆரியமாயை,

யார் கேட்க முடியும்,

ஆடியபாதம்,

கட்டை விரல்,

திரும்பிப்பார்,

நெஞ்சில் நெருப்பு,

பாவையின் பயணம்,

பிரம்மநாயகம்,

தேவதைகள்,

மழை,

கம்பரசம்,

துரோகி கப்லான்,

தீ பரவட்டும்,

ஏ தாழ்ந்த தமிழகமே,

அண்ணாவின் நாவல்கள்

பார்வதி பி.ஏ.,

ரங்கோன் ராதா,

கலிங்கராணி,அரசாண்ட ஆண்டி,

தசாவதாரம்,

குமரிக்கோட்டம்,

பிடி சாம்பல்,

இரும்பாரம்,

சிறுகதைகள்

ராஜாதி ராஜா,

செவ்வாழை,

இரு பரம்பரைகள்,

தஞ்சை வீழ்ச்சி,

மக்கள் தீர்ப்பு,

அன்னதானம்,புலிநகரம்,

கோமலத்தின் கோபல்,

சுடுமூஞ்சி,

சூதாடி,

பவள பஷ்பம்,

பலாபலன்,

வெள்ளை மாளிகை

பேய் ஓடிபோச்சி,

சொர்க்கத்தின் நகரம்,

அப்போதே சொன்னேன்,

நாடகங்கள்

நீதி தேவன் மயக்கம்,

சொர்க்க வாசல்,

இன்ப ஒளி,

ஓர் இரவு

சந்திர மோகன்

கண்ணாயிரத்தின் உலகம்,

சந்திரோதயம்,வேலைக்காரி,

கண்ணீர்துளி உள்ளிட்ட நூல்களை எழுதினார் என்று பேசினார். முன்னதாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், செல்வி ஜாய், ஜெம்ம ராகினி சகாய கில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Comments