கோவை குனியமுத்தூர் பகுதியில் பிரேம் தீப் ஜூவல்ஸ் அக்டோபர் 2 ந்தேதி துவக்க விழா!!
துவக்க விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம்,ஸ்கூட்டர்,கார் உள்ளிட்ட அதிரடி பரிசுகள் அறிவிப்பு!!
கோவை அருகே உள்ள பாலாக்காட்டில் செயல்பட்டு வரும் பிரேம் தீப் ஜூவல்ஸ் நிறுவனம் கோவையில் தனது புதிய கிளையை குனியமுத்தூர் பகுதியில் துவங்கி உள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முழுவதும் பெண்கள் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் பிரேம் தீப் ஜுவல்ஸ் அண்ட் டைமண்ட்ஸ்,தமிழகத்தின் முதல் கிளையாக கோவையில் தனது கிளையை துவங்க உள்ளனர்.
அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற உள்ள இதன் துவக்க விழாவில், திரை பிரபலங்கள் ஆலியா மானஸா,ஸ்வாசிகா மற்றும் மிஸ் இந்தியா பிரவீணா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேம் தீப் ஜுவல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் சாலியா பீபி,ரேஷ்மி ஆகியோர் பேசினர்.
இரண்டு தளங்களுடன் தங்க நகைகள்,டைமண்ட் மற்றும் வெள்ளி நகைகள் என அனைத்து விதமான கலெக்ஷன்கள் பிரேம் தீப் ஜுவல்ஸில் இருப்பதாக தெரிவித்தனர்.
கல்யாண மற்றும் பண்டிகை கால டிசைன்கள்,இளம் தலைமுறையினருக்கு ஏற்ற லைட் வெயிட் கலெக்ஷன்ஸ் மற்றும், 22 கேரட் துவங்கி 20 மற்றும் 18 கேரட் ரக தங்க நகைகளும் இங்கு இருப்பதாக தெரிவித்தனர்.
திறப்பு விழா சலுகையாக முதல் ஏழு நாட்கள் நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படுவதாகவும்,மேலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளாக ஏழு டி.வி.எஸ்.ஜூபிடர் ஸ்கூட்டர்கள் மற்றும் பம்பர் பரிசாக டொயோட்டா கிளான்ஸா கார் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments