'ஸ்ருஷ்டி 2025' கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை கோவையில் நடைபெறுகிறது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
38 ஆண்டுகளாக கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு கைவினைக் குழு செயல்படுகிறது. இந்த அமைப்பு சென்னை இந்திய கைவினைக் குழு மற்றும் .உலக கைவினைக் குழு ஆகியவை உடன் இணைந்து செயல்படுகிறது.
'ஸ்ருஷ்டி 2025' நிர்வாகக் குழு மற்றும் உறுப்பினர்களால் ஒழுங்குபடுத்தப்படும் இந்தக் கண்காட்சி, கடந்த 27 ஆண்டுகளாக கோவை மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வடிவமைப்பாளர்களின் தனித்துவமான படைப்புகள் இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த கண்காட்சியில் பூர்வீக நெசவுகள் மற்றும் கைவினைத்திறனைக் கொண்டாடும் நோக்கில், ஜவுளி, புடவைகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அணியும் ஆடைகள், விலையுயர்ந்த நகைகள், வீட்டு அலங்காரம், வீட்டு துணி, வாழ்க்கை முறை ஆபரணங்கள் என பல கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
'ஸ்ருஷ்டி 2025' கண்காட்சி, தமிழ்நாடு கைவினைக் குழு, ஆண்டு முழுவதுமான செயல்பாடுகளுக்கான நிதி ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இங்கிருந்து பெறப்படும் வருமானம், கோவையில் நடைபெறும் வருடாந்திர கைவினைப் பஜாரில் கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் மானிய நிதியாக பயன்படுத்தப்படுகிறது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில், கண்காட்சியை பார்வையிடும் வாடிக்கையாளர்கள், தங்கள் சொந்த பைகளை கொண்டு வர வேண்டும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments