கோவை பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரி 75 வது நிறுவனர் தின விழா!! கல்லூரியில் பயின்ற தொழிலதிபர்கள் மற்றும் சாதனையாளர்களான முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பி.எஸ்.ஜி &சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில், எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் அறங்காவலர் லக்ஷ்மிநாராயணசாமி சிறப்பு விருந்தினராக முன்னிலை வகித்து பேசினார்.
விழாவில் தலைமை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும் வெளியுறவுத் துறை க்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலை வருமான டாக்டர் சசிதரூர் கலந்து கொண்டு பேசினார்..
அப்போது பேசிய அவர்,காலநிலை மாற்றம் தற்போது பெரும் சவாலாகி வருவதாக கூறிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கை மாற்றங்கள் ஏற்படுகின்றன காலநிலை மாற்றத்தை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்கள் கண்டறிய வேண்டும் என தெரிவித்தார்.
மாற்று எரிசக்தி குறித்து யோசிக்க வேண்டும் சூரிய சக்தி காற்றாலை மின்சாரம் ஆகிய இயற்கையை பாதிக்காத எரிசக்திகளை பயன்படுத்த வேண்டும் இயற்கை பாதிக்காத கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் என கூறிய அவர், நமது தகவல்கள் திருடப்படுவதை தடுக்க இணைய பாதுகாப்பை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை கண்டறிய பொறியாளர்கள் முன் வர வேண்டும் என கேட்டு கொண்டார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பி.எஸ்.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் பயின்று சர்வதேச அளவில் சாதனையாளர்களாக உள்ள முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கவிரவிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments