கயத்தாறில் நாளை 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்!! காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, 02.08.2025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் மருத்துவ முகாமினை தேனாம்பேட்டை மண்டலம், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதனடிப்படையில், நாளை (சனிக்கிழமை) கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு  மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்தியமுறை மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம் மற்றும் ஸ்கேன் பரிசோதனை ஆகிய 17 சிறப்பு மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனைகள், அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனை, முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனை, காசநோய், தொழுநோய் பரிசோதனை, ஆரம்ப புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.

மேலும், முதல்-அமைச்சரின் விரிவாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற இணைச் சேவைகளும் வழங்கப்படுகிறது.

கயத்தாறில் நாளை நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

 - ராஜ்குமார்

Comments