கோவையில் நடைபெற்ற (APL) அக்ரக் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி!!
ஏர்கண்டிஷனிங் மற்றும் ரெப்ரிஜிரேஷன் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற இதில் ஐந்து அணிகள் பங்கேற்பு!!
கோவையில் கடந்த 17 வருடங்களாக ஏர்கண்டிஷனிங் மற்றும் ரெப்ரிஜிரேஷன் உரிமையாளர்கள் சங்கம் செயல் பட்டு வருகிறது.சங்க உறுப்பினர்களின் நலன் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அக்ரக் சமூகம் சார்ந்த சமுதாய பணிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சங்கத்தின் 17 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அக்ரக் பிரிமியர் லீக் எனும் கிரிக்கெட் போட்டி சங்கனூர் பகுதியில் வலை மைதானத்தில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முழுவதும் சங்க உறுப்பினர்களை கொண்ட போட்டியாக நடைபெற்ற இதில்,கோல்டன் டிராகன்ஸ்,விநாயகா வாரியர்ஸ்,ஆர்.பி.சூப்பர் கிங்ஸ்,தெர்மோபிராஸ்ட் டைகர்ஸ்,எவரெஸ்ட் டைட்டன்ஸ் என ஐந்து அணிகள் கலந்து கொண்டன.
முன்னதாக போட்டி துவக்க விழாவில்,அக்ரக் தலைவர் ஆன்சில் நியூனெஸ்,செயலாளர் சதீஷ்,பொருளாளர் நடராஜ்,துணை தலைவர் பாலசுப்ரமணியம்,துணை செயலாளர் கண்ணன்,துணை பொருளாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு சுற்று போட்டிகளாக விறுவிறுப்பாக நடைபெற்ற தொடரில் எவரெஸ்ட் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதே போல முறையே இரண்டாம் இடத்தை,ஆர்.பி.கிங்ஸ் அணியும்,மூன்றாம் இடத்தை கோல்டன் டிராகன் அணியும் பிடித்தன..
தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை நிர்வாகிகள் வழங்கி கவுரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அக்ரக் முன்னால் நிர்வாகிகள் கோல்டன் ரவி,ரவிச்சந்திரன், ராதகிருஷ்ணன்,அழகிரி மோகன்,மதுரை ராஜன்,முஸ்தபா உட்பட உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments