பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூர் முதலியார் தெருவில் *பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அன்னாரின் உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்" என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்கள்.* நிகழ்வில் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யாஅய்யன்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், கிருஷ்ணகுமார் தேர்தல் பொறுப்பாளர் ராமச்சந்திரன்,6-வது வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், முன்னாள் வார்டு செயலாளர் ஜெயபால், விளாத்திகுளம் பேரூர் கழக கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.
Comments