கோவையில் போதைப்பழக்கத்திற்கு எதிராக ஒன்றுதிரண்ட கல்லூரி மாணவிகள்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள், பேரழிவுகள் பற்றி உணர்த்தி, போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு மாணவிகள் நாடகம் நடத்தினர். இளைஞர்களும் பொதுமக்களும் போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட வேண்டியது தற்போது நம்முன் இருக்கும் மாபெரும் சவாலாகும்.
போதப்பழக்கத்தின் பிடியிலிருந்து நம் நாட்டையும் மக்களையும் காக்க அனைவரும் அணிதிரண்டு வர வேண்டியது இன்றியமையாதது என்பதைக் கல்லூரி மாணவிகளின் பேரணி உணர்த்தியது. கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா அவர்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் போதை என்னும் அரக்கனின் பிடியிலிருந்து நம் மக்களைக் காப்பாற்ற இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து எங்கள் மாணவிகள் முன்னெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments