கோயம்புத்தூரில் ஜெஇஇ மற்றும் நீட் ஆலோசனைக்காக ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ) தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது!!

கோயம்புத்தூர், தலைசிறந்த கல்வி ஆலோசனை நிறுவனமான ஃபிசிக்ஸ்வாலா (பிடபிள்யூ), கோயம்புத்தூரில் ஒரு புதிய தகவல் மையத்தைத் திறந்துள்ளது. விரைவில் அதே இடத்தில் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய படிப்பகத்தையும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மையம் கோயம்புத்தூர் ஆர். எஸ். புரத்தில் அமைந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த புதிய மையம், ஆர்.எஸ். புரம், வடவள்ளி, சாய் பாபா காலனி, கணபதி, ராமநகர், டவுன்ஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வி ஆலோசனை மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி குறித்த தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த பகுதிகளின் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் வளங்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த தகவல் மையம், சேர்க்கை, நிதி உதவி மற்றும் ஃபிசிக்ஸ்வாலா வகுப்புகளுக்கான பதிவு பற்றிய தகவல்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த இடமாக செயல்படுகிறது. மேலும், மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தைப் பற்றி நன்கு முடிவெடுக்க உதவும் வகையில் ஆலோசனை மற்றும் ஆதரவு சேவைகளையும் வழங்குகிறது.

இது குறித்து பிசிக்ஸ்வாலா கல்வி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அங்கித் குப்தா கூறுகையில், எதிர்காலத்தில், இதே பகுதியில் ஜெஇஇ மற்றும் நீட் தேர்வுக்கு தயாராதல் மற்றும் அடிப்படை பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கும் வித்யாபீத் மையத்துடன் இந்த தகவல் மையத்தை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம் என்றார். இந்த தேர்வுக்கான பதிவு இலவசம். மேலும், இது வகுப்பு ஐந்து முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பை முடித்த மாணவர்கள் என இயற்பியல் வேதியியல் கணிதம் மற்றும் இயற்பியல் வேதியியல் உயிரியல் ஆகிய இரண்டு பிரிவினருக்கும் திறக்கப்பட்டுள்ளது என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments