கடிதம் எழுதி கொண்டாட்டம்!!

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக கடிதம் எழுதும் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் நண்பர்கள், உறவினர்களுக்கு கடிதம் எழுதி கொண்டாட்டம். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக கடிதம் எழுதும் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கடிதம் எழுதி கொண்டாடினார். 

இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக கடித எழுதும் தினம் குறித்து பேசும் பொழுது;

உலகக் கடித தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி உலக கடிதம் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் ஆஸ்திரேலிய எழுத்தாளர் ரிச்சர்ட் சிம்ப்கின் எழுதிய ஆஸ்திரேலிய லெஜண்ட்ஸ் புத்தகத்திற்காக அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களை கௌரவிக்கும் விதமாக 2014 ஆம் ஆண்டு உலக கடிதம் தினமாக நிறுவப்பட்டது.

உலகின் முதல் கடிதம் கிமு 500 இல் பாரசீக ராணி அடோசாவால் எழுதப்பட்டது. கடிதம் எழுதுவது பல நூற்றாண்டுகளாக உள்ளது. பண்டைய எகிப்து மற்றும் கிரீஸ் காலங்களில் உலோகம், ஈயம், மெழுகு பூசப்பட்ட மர மாத்திரைகள், மட்பாண்ட துண்டுகள், விலங்குகளின் தோல் மற்றும் பாப்பிரஸ் போன்ற பொருட்களில் கடிதங்கள் எழுதப்பட்டன.

தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது கடிதப் போக்குவரத்துகள் குறைந்து வருகிறது. 

பொதுமக்கள் வாட்ஸ் அப், முகநூல், இமெயில் மூலம் தங்களுடைய கடிதப் போக்குவரத்தை பயன்படுத்துவதால் தொடர்ந்து கடிதம் எழுதுவது குறைந்து வருகிறது. 

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறையில் அடைபட்டிருந்தபோது தனது பத்து வயது மகள் இந்திராவிற்கு பூமியின் கதை, உலக வரலாறு, இயற்கை வரலாறு ஆகியவற்றை எழுதி கடிதத்தின் மூலம் உலகை அறிமுகப்படுத்தினார்.கடிதம் எழுதுவதை ஊக்குவிக்கும் விதமாக உலக கடித தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா, வெள்ளைச்சாமி செல்விஜாய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.


Comments