அழிமாட்டம் வனவிலங்குகள் குடிநீர் பாதிப்பு - சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- எங்களது ஊரில் எங்களது சமுதாயத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் வசிக்கிறோம். முடுக்கலாங் குளம் கிராமம் சர்வே எண்404/1ல் 0.83.00 ஹெக்டேர் மற்றும் 404/2 ல் 0.83.00 ஹெக்டேர் அளவு கொண்ட நீளமானது நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலம் ஆகும்.
இந்த நிலம் மற்றும் அதனை அடுத்த நிலங்கள் காப்பு காடுகளாக உள்ளன. கடந்த 2001 2005 காலகட்டத்தில் முடுக்கதான் குளம் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தார்கள். மேலும் காப்புக்காடுகளில் உள்ள புள்ளிமான்,கடமான், நரி போன்ற வனவிலங்குகள், கால்நடைகள் இந்த ஊரணியில் தான் தண்ணீர் குடித்து வந்தது.
மேலும் சர்வே எண்404/1ல் 0.83.00 ஹேக்டேர் நிலத்தில் வண்டிப் பாதையும் தண்ணீர் செல்லும் வாய்க்காலும் உள்ளது. எங்கள் ஊருக்கு வரும் பிரதான குடிநீர் குழாய் இந்த நிலத்தின் வழியாக செல்கிறது. இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு சர்வே எண் 404/1 ஹெக்டேர்.83.00 விஸ்தீரணம் உள்ள நிலத்தை பொறுத்து கலாவதி என்பவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டா நிலமில்லா ஆதி திராவிட விவசாயிகளுக்கு விவசாய நிலங்கள் வழங்கும் அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பட்டா ஆகும். இந்த நிலங்களை ஆதிதிராவிடர் அல்லாத இதர மக்களுக்கு உரிமை மாற்றம் செய்ய சட்டப்படியான தடை உள்ளது. அவ்வாறு உரிமை மாற்றம் நடைபெற்றால் அந்தப் பட்டாவை ரத்து செய்யவும் வருவாய்த் துறையினருக்கு அதிகாரம் உள்ளது.
மேலும் சட்டத்திற்கு புறம்பானதும் ஆகும் கலாவதி என்பவருக்கு ஒப்படைவ பட்டாவில் கண்ட நிபந்தனைகளின் படி அனுபவித்து வரவில்லை. மாறாக கலாவதி கடந்த 25/4/2022 அன்று சர்வே எண்404/1 நிலத்தை ஐயம்பெருமாள் என்பவருக்கு கிரயம் கொடுத்துள்ளார். மேலும் ஐயம்பெருமாள் கடந்த 29 1 2025 அன்று சிம்ரிதாயுக்கு கிரயம் கொடுத்துள்ளார். சிம்ரிதா ஆதிதிராவிட ர் வகுப்பைச் சார்ந்தவர் அல்ல எனவே நிபந்தனைக்கு முரணாக கொடுக்கப்பட்டுள்ள ஆவண மாற்றம் இல்லாததும் செல்லாததும் சட்டத்திற்கு புறம்பானதாகும் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊரணியில் கரையை சேதப்படுத்தி அதில் பிளாட்டுகள் அமைக்க முயற்சி செய்தார்கள். அப்போது எங்கள் ஊரில் இருந்து தனி நபர்கள் ஊரணியை சேதப்படுத்தும் முயற்சியை தடுக்கவும் சர்வே எண்404/1ல் வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்யவும் கேட்டு பல மனுக்கள் வருவாய் துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது சம்பந்தமாக எங்கள் ஊர் பொதுமக்கள் சார்பாக பல்வேறு போராட்டங்களை பல கட்டமாக நடத்தியுள்ளோம் முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் மோசடியாக கிரயம் பெற்றுள்ள சிம்ரிதா கடந்த 18/9/ 2025 அன்று சர்வே எண் 404/1ல் உள்ள ஊரணியை சமன் செய்யவும் அதில் உள்ள வாய்க்காலை சேதப்படுத்தவும் செய்தார்.
மேலும் எங்கள் ஊர் மக்களுக்கு குடிநீருக்காக வரும் பிரதான குடிநீர் குழாயையும் சேதப்படுத்தினர். மேலும் நிலத்தின் வழியாக செல்லும் வண்டி பாதையையும் பொதுமக்கள் புழங்க விடாதே வண்ணம் வேலை அமைப்பு ஏற்படுத்தவும் முயற்சி செய்தார். கால்நடைகள் வனவிலங்குகள் அந்த ஊரணியில்தான் தண்ணீர் குடித்து வந்தன மேற்படி ஊரணியை சேதப்படுத்தியதால் வனவிலங்குகள் குடிநீர் தேவையை சிம்ரிதா தடுத்து நாசம் செய்துள்ளார்.
இதனால் ஊரணியில் தண்ணீர் குடித்து வந்த மான்கள் மற்றும் வனவிலங்குகள் தண்ணீர் இல்லாமல் வழிமாறி ஊருக்குள் வரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் தண்ணீர் குடிக்க அன்றாட வாழ்வியலை சிமெரிதா சட்டத்திற்கு புறமான செயல் சிதைத்துள்ளது. இது இயற்கை நீதிக்கும் வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு சட்டத்தின் படியும் குற்றமாகும்.
ஆகவே மேற்படி கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தானந்தபுரம் குமணன் அவர்களின் மகள் சிம்ரிதா மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் வனவிலங்குகளுக்கு மீண்டும் குடிநீர் கிடைத்திட வழிவகை செய்திடவும் மனுவில் கேட்டுள்ளார் முத்துப்பாண்டி
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.
Comments