யாஷிகா ஆனந்த் நடிக்கும் “டாஸ்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!!
பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் சையத் ஜாஃபர் தயாரிப்பில், சகு பாண்டியன் இயக்கத்தில் ரத்தன் மௌலி, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் 'டாஸ்' (TOSS).
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா படக்குழுவினர் கலந்து கொள்ள கோவில்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பூஜை மற்றும் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ MLA கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.
படத்தை பற்றி இயக்குனர் சகு பாண்டியன் கூறியதாவது: மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. யாஷிகா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் இருந்து வந்திருக்கும் தேஜா ஸ்ரீ இன்னொரு நாயகியாக நடிக்கிறார். கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரே கட்டமாக 25 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த ஊர் மக்களின் ஆதரவும், அன்பும் எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது.
முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பூஜைக்கு வந்திருந்து எங்கள் குழுவை வாழ்த்தியதோடு, படப்பிடிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். TOSS என்ற தலைப்பே எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது எனவும் எங்களை பாராட்டினார்.
படக்குழுவினர் விபரம்:
நடிகர்கள்:
ரத்தன் மௌலி,
யாஷிகா ஆனந்த்,
விஜய் டிவி புகழ் யோகி, ஷன்னா
தேஜா ஸ்ரீ,
சஞ்சய் ஷங்கர் & மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்குனர் - சகு பாண்டியன்,
தயாரிப்பு - சையத் ஜாஃபர்,
இசை - சாந்தன் அனிபஜகனே,
ஒளிப்பதிவு - தர்மதுரை,
படத்தொகுப்பு - வளர்பாண்டி,
பாடல்கள் - நலங்கிள்ளி,
ஸ்டண்ட்ஸ் - ஜேசுதாஸ்,
துணை இயக்குனர் -
A.வரதராஜ். நித்யானந்தம்,
நிர்வாக தயாரிப்பு -
A.சுந்தரமூர்த்தி,
புரொடக்ஷன் எக்சிகியூட்டிவ் -
KR வெங்கடாசலம்,
மக்கள் தொடர்பு - ஷேக்.
விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு 2025 இறுதியில் அல்லது 2026 துவக்கத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
- ராஜ்குமார்.
Comments