கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் வட்டார அளவிலான வினாடி வினா மற்றும் சிறார் திரைப்படப் போட்டி!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கந்தர்வகோட்டை வட்டார அளவிலான மன்ற போட்டிகளான  வினாடி வினா மற்றும் சிறார் திரைப்பட போட்டி நடைபெற்றது. ‌ இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் அமிர்தம் மாலதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வட்டாரக்  கல்வி அலுவலர் மெகராஜ் பானு , இர்ஷாத் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வட்டார வளமைய மேற்பார்வையாளர்  பாரதிதாசன் ஒருங்கிணைத்து அனைவரையும் வரவேற்றார். வட்டார அளவிலான சிறார் திரைப்பட போட்டியில் விலங்குகள் மாசுபாடு பற்றி பேசுதல்  மூன்று நிமிடத்திற்கு வசனங்களுடன் கதை எழுதுதல், ஒளிப்பதிவு என்ற தலைப்பில் என் வீட்டில் ஒரு சிறிய மாற்றம் மின்சார சேமிப்பு துணிபை பயன்பாடு, மரம் நடுதல் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு காட்சிப்படுத்துதல் என்ற தலைப்பில் இரண்டு நிமிடம் திரைப்படத்தை உருவாக்குதல், சிறார் திரைப்பட நடிப்பில் நடிப்பதற்கு தேவையான பொருள்களையும் உடன் நடிக்கும் நபரையும் பயன்படுத்தி 2050 ஆம் ஆண்டில் ஒரு ஆறு அல்லது ஏழு வகுப்பில் உள்ள பயிலும் மாணவர் ஒருவர் நாம் இன்று இயற்கைக்கு எதிராக செய்யும் தவறுகளை சொல்லி அவை நாளைக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை வண்ணம் நடிக்கவும், மறுக்கப்பட்ட விவசாயி கால்நடை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட 

விவசாயிகளின் கதை என்ற தலைப்பிலும், உங்கள் ஊரில் அல்லது உங்களுக்குத் தெரிந்த யாராவது சுற்றுச்சூழலை பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சி மட்டும் அவர்களின் செயல்களை அடிப்படையாகக் கொண்டு இரண்டு நிமிட திரைப்படத்தை உருவாக்குதல், கார்பன் தடங்கள் ஒரு இளைஞன் தன் வாழ்வில் எடுக்க முடிவுகள் பூமிக்கு என்ன பாதிப்பு உண்டாக்குகின்றன என்ற தலைப்பிலும் குப்பையின் இரண்டாம் வாழ்க்கை குப்பையை எறிவதற்கு பதிலாக மீண்டும் பயன்படுத்தினால் மருத்துவம் செய்வதால் அல்லது உரமாக மாற்றினால் என்ன கிடைக்கும் சுமையாக இருக்கும் குப்பை மற்றும் மலமாக மாறும் குப்பை என்னும் இரண்டையும் ஒப்பிட்டு இரண்டு நிமிடம் திரைப்படத்தை உருவாக்குதல், 6 7 வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் தேன்சிட்டு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் காலநிலை மாற்றம் என்ற தலைப்பிலும் வினாடி வினா போட்டி நடைபெற்றது. வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களாக ஜெயக்குமார், ரகமதுல்லா, கண்ணன், நாராயணசாமி உள்ளிட்டோர் செயல்பட்டனர். போட்டியின் நடுவராக தவச்செல்வம் , பாக்யராஜ் கனிமொழி, பிரதீபா நர்மதா  செயல்பட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Comments