கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் சார்பாக நடைபெற்ற மீலாது நபி தின விழா!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இஸ்லாமியர்களின் இறை துாதரான நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா மீலாது நபி விழாவாக அனைத்து இஸ்லாமிய மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் பள்ளிவாசல்,சார்பாக மீலாது நபி தின விழா கொண்டாடப்பட்டது..
முன்னதாக நபிகள் நாயகம் குறித்த வரலாறு,மற்றும் இஸ்லாம் சமயத்தின் சிறப்புகள் குறித்து இஸ்லாமிய அறிஞர்களின் சொற்பொழிவு நடைபெற்றது..
இதனை தொடர்ந்து சிறுவர்,சிறுமிகளின் மீலாது நபி ஊர்வலம் நடைபெற்றது..
உலக அமைதி,மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற பேரணியில் இஸ்லாமிய சிறுவர்,சிறுமிகள் ஊர்வலமாக சென்றனர்.
இதில் அந்த பகுதிகளில் வசிப்போர், பல்வேறு அமைப்பினர்,தன்னார்வலர்கள், என பலர் சிறுவர்,சிறுமிகளுக்கு பிஸ்கட்டுகள் இனிப்புகள்,ஜூஸ் வகைகள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
குனியமுத்தூர் தாஜூல் இஸ்லாம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் முன்பாக துவங்கிய ஊர்வலம் பாலக்காடு சாலை வழியாக குனியமுத்தூர் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தது.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, கோவை குனியமுத்தூர் தாஜுல் இஸ்லாம் சுன்னத் (ஹனபி) ஜமா அத் பள்ளிவாசல் நிர்வாகிகள், முகமது இப்ராகிம் அசனார், முகமது ஃபாருக் முகமது ரஃபி , அப்துல் ரஹ்மான், முத்தவல்லி அக்பர் அலி, மேனேஜர் சுலைமான் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments