என்.ஜி.பி நிறுவனங்கள் சார்பில் வேன்கார்டு அகாடமி : புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்!!
கோவை, செப்.17 கோவை என்.ஜி.பி கல்வி நிறுவனங்கள் சார்பில், கேம்பிரிட்ஜ் கல்வி வழி பள்ளி, வேன்கார்டு அகாடமி என்ற பெயரில் ஒரு புதிய பள்ளி கட்டிடம் காளப்பட்டியில் துவங்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். கே.எம்.சி.எச் கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் தவமணி தேவி வரவேற்றார். டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி தலைமை வகித்து பேசுகையில், 'வளர்ந்து வரும் கல்வி சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மக்களின் தேவையை கருதி, இப்பள்ளியை துவக்கி உள்ளோம். இரு மொழி கொள்கை பின்பற்ற உள்ளோம். மேல்படிப்புக்கு வெளிநாடு செல்ல விரும்பும் குழந்தைகளுக்கு பயன் தரும், என்றார். தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், கல்வி, தொழில், மருத்துவத்தில் சிறப்பான நகராக கோவை உள்ளது. வாழ்வியல் கூடமாக சமத்துவம், அன்பு, அனைத்து ஒழுங்குகளையும் கற்றுத்தரும் இடமே பள்ளி. சிந்தனைக்கு தாய் மொழி தமிழும், வெளியுலக தொடர்புக்கு ஆங்கிலமும் போதும். தேவை இருப்பின் பிறமொழிகளை கற்றுக்கொள்ளலாம் என்றார். என்.ஜி.பி., கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள் டாக்டர் அருண், மதுரா, முதன்மை செயலர் நடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் சப்னா நன்றி தெரிவித்தார்.
கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு அளிக்கவுள்ள வேன்கார்டு அகாடமி, பல்வேறு பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும். 2025 - 26 கல்வியாண்டில் சிறுகுழந்தைகளுக்கான சேர்க்கை விரைவில் துவங்கும் எனவும் 2026 - 27 கல்வியாண்டில் 8-ம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறும் எனவும் பள்ளி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம்: கோவை என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள் சார்பில், கேம்பிரிட்ஜ் கல்வி வழி பள்ளி, வேன்கார்டு அகாடமி
என்ற பெயரில் ஒரு புதிய பள்ளி கட்டிடம் காளப்பட்டியில் துவங்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments