ஓணம் திருவிழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அத்திப்பூ கோலப்போட்டிகள், கேரளா உணவு செய்யும் போட்டிகள், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதற்கு கல்லூரியின் சி.இ.ஓ சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ரேடீசன் ப்ளூ ஹெச்.ஆர் ஸ்பெசலிஸ்ட் வினிதா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து திருவிழா மற்றும் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
அத்திப்பூ கோலப்போட்டியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் விதவிதமான கோலங்களை போட்டனர். மேலும் ஓணம் சதயா போட்டியில் சுமார் 10 குழுக்களாக மாணவ, மாணவிகள் பிரிந்து விதவிதமான கேரளா முறைப்படி 15 வகை முதல் 42 வகையான உணவுகளை தயாரித்தனர். இவைகளை சிறப்பு விருந்தினர், கல்லூரி சி.இ.ஒ. மற்றும் ஆசிரியர்கள் அந்த உணவுகளை சுவைத்தும், மாணவர்களின் பிரசண்டேசன் உள்ளிட்டவைகளை சரிபார்த்தனர்.
மேலும் மாணவர்கள் காந்தாரா, கதகளி, மகாபலி, புலி வேசம் என அணிந்து நடனமாடி விழாவில் அசத்தினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலக்கலான நடனம், கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரியின் துறைத்தலைவர் மற்றும் கல்லூரி செப் கேசவன், பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.
Comments