கோவையில் க்ரீம் ஸ்டோன் ஐஸ்கிரீம் தனது புதிய கிளையை தொடங்கியது!

சாய்பாபா காலனியில் 1,000 சதுர அடியில் அமைந்த பிரமாண்ட ஐஸ்கிரீம் ஷாப்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் புதுமையான ஐஸ்கிரீம் பிராண்ட் க்ரீம் ஸ்டோன் ஐஸ்கிரீம், கோவை சாய்பாபா காலனியில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய கிளையை தொடங்கியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

க்ரீம் ஸ்டோன் தனது சிக்னேச்சர் ஸ்டோன்-கிராஃப்டட் க்ரீயேஷன்களால் மக்கள் ஐஸ்கிரீமை அனுபவிக்கும் முறையை மாற்றியமைத்துள்ளது. கடைசி ஸ்பூன் வரை க்ரீமி -ஆக இருக்கும் அனுபவத்தை வழங்குவதோடு, தரம் மற்றும் சரியான விலை ஆகியவற்றை இணைத்து, குடும்பங்கள், இளைஞர்கள் மற்றும் dessert ரசிகர்களின் மனதையும் கவர்ந்துள்ளது. மேலும், இது 100% vegetarian ஆகும்.

சாய்பாபா காலனியில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய ஷாப் வெறும் ஐஸ் க்ரீம் ஷாப் மட்டுமல்ல – இது 1,000 சதுர அடியில் அமைந்த வண்ணமயமான, விசாலமான இடமாகும். மெல்லிய இசை, வசதியான இருக்கைகள் மற்றும் அன்பான சூழல் கொண்டு, ஒவ்வொரு வருகையையும் மறக்க முடியாத நினைவாக மாற்றுகிறது.

இந்த இடத்தை சமூகத்திற்காக உருவாக்க எங்கள் மனதார முழுமையாக ஈடுபட்டுள்ளோம். உரிமையாளராக, தரமும் சேவையும் குறையாமல் இருப்பதை உறுதி செய்கிறேன். எங்கள் ஊழியர்கள் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கப் பயிற்சி பெற்றவர்கள். இரண்டு சக்கர வாகனங்களுக்கும் நான்கு சக்கர வாகனங்களுக்கும் போதுமான பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்துள்ளோம்; அதனால் வாடிக்கையாளர்கள் எந்த சிரமமும் இல்லாமல் வரலாம். விரைவில், காரிலிருந்தே ஆர்டர் செய்யும் சேவையையும் தொடங்குகிறோம் – நீங்கள் வந்து, காரிலிருந்தே ஆர்டர் செய்து ஐஸ் க்ரீமை ஐ சுவைக்கலாம்,” என்று சாய்பாபா காலனி  பிரான்சிஸிஸ் உரிமையாளர் திவ்யா சுரேஷ் தெரிவித்தார்.

என்.எஸ்.ஆர். சாலையில், அஞ்சனேயா பழமுதிர் கடைக்கு எதிரிலும், கரூர் வயஸ்யா வங்கியின் அருகிலும் அமைந்துள்ள இந்த ஷாப், அனைவரும் எளிதில் அடையக்கூடிய சிறந்த இடத்தில் உள்ளது.

“இந்த இடத்தை எங்கள் அன்பும் அக்கறையும் கொண்டு வடிவமைத்துள்ளோம். க்ரீம் ஸ்டோனை உங்கள் மகிழ்ச்சியான தருணங்களின் ஓர் அங்கமாக்குங்கள்,” எனவும் திவ்யா குறிப்பிட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments