கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இலவச இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது!!

கோவை: உலக இருதய தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில்  கிராம மக்கள் பயனடையும் வகையில் இலவச இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைசார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு பச்சாபாளையத்தில் உள்ள கிராம மருத்துவமனை வளாகத்தில் இலவச மெகா இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோவையில் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய இதய பரிசோதனைகளை எளிதில் கிடைக்கச் செய்வதே நோக்கமாக kontu.

இந்த மருத்துவ மு நடைபெற்ற இந்த முகாமை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் தொடங்கி வைத்தார். 

ஆர். சுந்தர் பேசுகையில், “எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்தர மருத்துவச் சிகிச்சையையும் உன்னதமான தொண்டு நடவடிக்கைகளையும் அளிப்பதில் சிறந்து விளங்குகிறது என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய மருத்துவர்கள் இந்த முகாம் மூலம் அத்தியாவசிய இதய பரிசோதனையை பச்சபாளையத்திற்குக் கொண்டு வந்தது என்பது சமுதாயத்திற்கு எங்களால் முடிந்த உதவியை திரும்ப செய்ய கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கிறோம்," என்றனர். 

அனைவரின் வாழக்கையில் தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு உள்ளது. கைபேசி பயன்பாடு என்பது எதிர்பாராத அளவு அதிகரித்துவிட்டதால் முறையற்ற உறக்கம் பலரிடம் காணப்படுகிறது. இத்துடன் துரித உணவுகள் உண்பது, குறைந்த உடல் உழைப்பு ஆகியவை சிறு வயதினரிடம் கூட இதய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. 

இதில் வருத்தப்படவேண்டியது என்னவென்றால், இது போன்ற சம்பவங்கள் கிராமங்களிலும் கூட நடக்கிறது என்பது தான். எனவே இதய நோய் உள்பட எந்த நோயாக இருந்தாலும் அதை ஆரம்ப காலத்திலேயே  கண்டுபிடிப்பது  மிக முக்கியமானது. அதற்கு இது போன்ற முகாம்கள் நிச்சயம் உதவியாக இருக்கும்.இளையவர்கள் மற்றும் வயதானவர்கள் உட்பட அனைத்து மக்களும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த துவக்க விழாவில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சி.வி. இராம்குமார், முதன்மை நிர்வாக அதிகாரி டி. மகேஷ் குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர்   ச.ராஜகோபால , மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். எஸ். அழகப்பன் மற்றும் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றனர். மற்றும் இந்த முகாமில் இருதய மற்றும் இருதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments