உலக நீர் கண்காணிப்பு தினத்தை முன்னிட்டு நீரை பாதுகாக்க விழிப்புணர்வு!!

கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக நீர் கண்காணிப்பு தினத்தை முன்னிட்டு நீரை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு.

கந்தர்வக்கோட்டை செப் 19

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் உலக நீர் கண்காணிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய செயலாளர் ரகமதுல்லா பேசும் பொழுது;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உலக நீர் கண்காணிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள், நீர் வளங்களை கண்காணித்தல் மற்றும் நீர் மாசுபாட்டைத் தடுப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பொதுமக்களை நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தண்ணீரைச் சேமிப்பது நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவுகிறது. மின்சாரம் தயாரித்தல், சுத்தம் செய்தல், சமைத்தல், நீர்ப்பாசனம் செய்தல் போன்ற பல முக்கிய காரணங்களுக்காக நாம் தண்ணீரைப் பயன்படுத்துகிறோம்.

நமது மரங்களும் செடிகளும் உயிர்வாழ நாம் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்று பேசினார்.நிறைவாக ஆங்கில ஆசிரியர்  சிந்தியா நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Comments