கோவை ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா!!

கோவை  குரும்ப பாளையம் பகுதியில் உள்ள  ஆதித்யா தொழில் நுட்ப கல்லூரியில் 2025 ஆம் ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆதித்யா கல்வி குழுமங்களின் தலைவர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,நிர்வாக அறங்காவலர்கள் பிரவீன் குமார் மற்றும் ஸ்ரீநிதி பிரவீண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கல்லூரியின்  முதல்வர் சோமசுந்தரேஸ்வரி அனைவரையும் வரவேற்று கல்லூரியின்  செயல்பாடுகள் குறித்து பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள  முன்னனி நிறுவனத்தை சேர்த்த சசிகாந்த் ஜெயராமன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சியில் பொறியியல் துறை முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்த அவர்,உலகின் கடந்த கால தொழில் நுட்ப வளர்ச்சியில் பொறியியல் துறைக்கு முக்கிய இடம் இருப்பதாக கூறினார்.

மாணவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் வாழ்வில் பெரிய வெற்றியாளர்களாக மாறலாம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக விழாவில் தலைமை உரையாற்றிய கல்லூரி தலைவர் சுகுமாரன்,பொறியியல் பயிலும் மாணவர்கள் தங்களை ஒரு தொழில் முனைவோர்களாக மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தி,வேலை தேடுவதை விட அதை கொடுக்கும் இடத்திற்கு வர வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கல்லூரியின் இயக்குனர் ஜோசப் தனிக்கல், அகாடமிக் டீன் ராஜேந்திரன் உட்பட,துறை தலைவர்கள்,பேராசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள்,என பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments