2026 தேர்தல் திமுகவிற்கு சோதனை - அதிமுகவிற்கு சாதனை! - முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில்,
524 வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது.
டெல்டா பகுதியில் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும் அவல நிலை திமுக ஆட்சியில் உள்ளது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டு பன்றிகள், மான்கள் தொல்லையினால் விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் எந்த நிவாரணமும், பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் ஏமாற்றி உள்ளனர் இந்த ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் பாதிக்கப்பட்டு போராடும் நிலை உள்ளது. தூய்மைப் பணியாளர்கள் முதல் கோட்டையில் உள்ள உயர் அதிகாரிகள் வரை ஏமாற்றப்பட்டு, ஏமாற்றத்தின் விளிம்பில் உள்ளனர். மக்கள் விரக்தியில் உள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கு சோதனையான தேர்தலாகவும், அதிமுகவிற்கு சாதனையான தேர்தலாக இருக்கும் என்றார்.
இதில் முன்னாள் எம்எல்ஏ மோகன், ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், பழனிச்சாமி, போடூசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
- ராஜ்குமார்.
Comments