கொங்கு மண்டலத்தில் முதன்முறையாக கோவை அம்பாள் ஆட்டோ - மாருதி சசுசூகி ஷோ ரூமில் அனைத்து வசதிகளும் கொண்ட 'விக்டோரிஸ்' கார் அறிமுகம்...

 

கொங்கு மண்டலத்தில் முதன்முறையாக கோவை அம்பாள் ஆட்டோ - மாருதி சசுசூகி ஷோ ரூமில்  அனைத்து வசதிகளும் கொண்ட 'விக்டோரிஸ்' கார் அறிமுகம். கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள அம்பாள் ஆட்டோ டீலர்ஷிப்பில் (மாருதி சசுசூகி அரீனா) இன்று மாருதி சசுசூகி நிறுவனத்தின் புது சொகுசு காரான 'விக்டோரிஸ்' அறிமுகம் செய்யப்பட்டது. இதை அம்பாள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அசோகன் முத்துசாமி; துணை தலைவர் அனீஸ் முத்துசாமி, ; இயக்குனர் சந்தான செல்வி ஆகியோர் முன்னிலையில் விஜய் தொலைக்காட்சியை சேர்ந்த பிரபல தொகுப்பாளர் நீயா நானா கோபிநாத் அறிமுகம் செய்தார். 

இது குறித்து இந்நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜேஷ் ஜெயராமன் கூறுகையில்:-

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த மாருதி சுசூகி விக்டோரிஸ் காரை அறிமுகம் செய்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இது ஒரு ப்ரீமியம் வகை கார். மாருதி சுசூகியின் வரலாற்றில் இத்தனை வசதிகள் அடங்கிய ஒரு காரை இதற்கு முன்னர் இதன் அரீனா ஷோ ரூம்களில் அறிமுகம் செய்தது இல்லை.

இந்த காரில் இல்லாத வசதிகளே இல்லை என்பதை குறிப்பிடும் வகையில் இதன் ஸ்லோகன் அமைந்துள்ளது. இது மிகவும் பாதுகாப்பான கார் என்பதை உணர்த்தும் வகையில் இது பி.என்.சி.ஏ.பி (Bharat NCAP) மற்றும்  ஜி.என்.சி.ஏ.பி. (Global-NCAP) தர மதிப்பீட்டில் 5 நட்சத்திர புள்ளிகள் பெற்றுள்ளது. 

பல்வேறு வசதிகள் கொண்ட இந்த கார் ரூ. 10.99 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் வரை (எக்ஸ் - ஷோ ரூம்)  உள்ள விலை வகைகளில் இந்த கார் அறிமுகம் ஆகியுள்ளது. இது மிகவும் ஸ்டைலான கார். 10 வித வண்ணங்களில் இந்த கார் கிடைக்கும். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த காரின் ஸ்டைல் மற்றும் வசதிகளை இந்திய முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். இதற்கு சாதகமான விமர்சனம் நாடு முழுவதும் வந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த கார்களில் இவ்வளவு சாதகமான விமர்சனங்கள் பெற்ற கார் எதுவும் இல்லை என்றே பார்க்கப்படுகிறது.  அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு பாதுகாப்பான காரை வாங்கவேண்டும் என விரும்புவோர்கள் இந்த காரை வந்து பார்த்து, அனுபவித்து பார்த்து அதன் பின் முன்பதிவு செய்ய அம்பாள் ஆட்டோ சார்பில் அழைக்கிறோம் என கூறினார்.

-சீனி, போத்தனூர்.

Comments