தூத்துக்குடியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 870.80மிமீ  மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 154மிமீ, திருச்செந்தூரில்  146மி.மீ மழை பதிவாகி உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில் தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. நள்ளிரவிலும் மழை தொடர்ந்து பெய்தது.  தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்):

தூத்துக்குடி 42.80,  ஸ்ரீவைகுண்டம் 56.20, திருச்செந்தூர் 146, காயல்பட்டினம் 154, குலசேகரன்பட்டினம் 55, சாத்தான்குளம் 84, விளாத்திகுளம் 8.00, காடல்குடி 7.00, வைப்பார் 32.00, சூரன்குடி 17.00, கோவில்பட்டி 31.00, கழுகுமலை 32.00, கயத்தாறு 18.00, கடம்பூர் 17.00, ஓட்டப்பிடாரம் 54.00, மணியாச்சி 30.00, வேடநத்தம் 45.00, கீழ அரசடி 25.00, எட்டயபுரம் 16.80, என மொத்தம் 870.80மிமீ  மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 45.83 மி.மீ. மழை பெய்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-பூங்கோதை நடராஜன்.

Comments