வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சர்வீஸ் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளுக்காக மித்ரா எனும் பிரத்யேக செயலி அறிமுகம்!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த வகையில் கோவையை சேர்ந்த சந்தோஷ் கோபு எனும் இளைஞர் வீடுகளில் உள்ள டிவி, பிரிட்ஜ்,வாசிங் மெஷின்,ஏ.சி. போன்ற வீட்டு உபயோக பொருட்களை சர்வீஸ் மற்றும் பழுது பார்ப்பதெற்கென பிரத்யேக செயலியை உருவாக்கி கவனம் ஈர்த்துள்ளார்.
மித்ரா (MITHRA) எனும் இந்த செயலி வாயிலாக வீட்டு உபயோக பொருட்களில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக மித்ரா செயலி வாயிலாக பொதுமக்கள் பதிவு செய்தால் ஒரு மணி நேரத்தில் வீடுகளுக்கே வந்து பொருட்களை சரி செய்யும் வகையில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளனர்.
இதற்கான அறிமுக விழா ஆவராம்பாளையம் பகுதியில் உள்ள கோ இண்டியா அரங்கில் நடைபெற்றது..
இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரபல தொழிலதிபர்களான மன்னா மெஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும்ங நிர்வாக இயக்குனர் ஜெயராஜ் மற்றும் சோஷியல் ஈகிள் நிறுவனர் தரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டு மித்ரா செயலியை அறிமுகம் செய்து வைத்தனர்.
முன்னதாக மித்ரா செயலியின் பயன்பாடுகள் குறித்து சந்தோஷ் கோபு கூறுகையில்,வீட்டு உபயோக பொருட்களை சரிசெய்வதில் அலைச்சல்களை தவிர்க்க இந்த செயலியை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்.
மித்ரா செயலியில் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மற்றும் தேவை படும் சேவைகள் குறித்து சிறிய தகவல்கள் பதிவு செய்தால் ஒரு மணி நேரத்தில் டெக்னிஷீயன்கள் நேரடியாக வீடுகளுக்கே வந்து பொருட்களை சர்வீஸ் செய்யவோ அல்லது பழுது பார்த்து தருவதாக தெரிவித்தார்.
இந்த சேவையில் , டிவி, பிரிட்ஜ், வாசிங்மெசின், ஏசி ஆகியவை சிறந்தமுறையில் சர்வீஸ் செய்து தரப்படுவதாகவும், அனைத்து பிராண்ட் பொருட்களும் சர்வீஸ் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
தற்போது கோவையில் மட்டும் துவங்கி உள்ள இந்த சேவை விரைவில் அனைத்து இடங்களிலும் விரிவு படுத்த இருப்பதாக தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி போத்தனூர்.
Comments