ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி சென்றனர்...
ஆயுத பூஜை பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் தொழில்துறையினர் பொதுமக்கள் என பலரும் அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள், வாகனங்கள், கருவிகளுக்கு பூஜைகள் மேற்கொள்வர். வாழை மரக்கன்றுகள், செந்தவந்தி பூ மாலைகள், பொறிகடலை, மா இலைகள், ஆகியவற்றை வைத்தும், வண்ண வண்ண காகித தோரணங்களால் வாகனங்கள் தொழிற்சாலைகள் உள்ள கருவிகள் ஆகியவற்றை அலங்கரித்து பூஜைகள் மேற்கொள்ளப்படும். எனவே இன்று பொதுமக்கள் பலரும் பூஜை பொருள்கள் பூமாலைகள் வாழை மரக்கன்றுகளை அதிகளவு வாங்கி செல்கின்றனர். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன்படி கோவையில் பூ மார்க்கெட் பகுதியில் அனைத்து பொருட்களும் கிடைப்பதால் பொதுமக்கள் பலரும் பூ மார்க்கெட்டிற்கு வந்து பொருட்களையும் வாங்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அதிகளவு கூட்டமானது காணப்பட்டது. அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சரி செய்தனர். மேலும் பொது மக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கும் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி இருந்த வாகனங்களுக்கும் போக்குவரத்துக் காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.ஆயுத பூஜையை முன்னிட்டு அதிகமாக வாங்கும் செவ்வந்தி பூ கிலோ 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரையிலும் வாழை மரக்கன்றுகள் ஜோடி 100 ரூபாயில் இருந்தும் விற்பனை செய்யப்படுகிறது. பேட்டி செயலாளர் ஜயப்பன்.
-சீனி, போத்தனூர்.
Comments