"யுவா ஐஏஜ் எண்டோ இன்சைட் 2025” மருத்துவ கருத்தரங்கு!!
இந்திய மகளிர் மருத்துவ எண்டோஸ்கோபிஸ்ட்கள் சங்க தமிழ்நாடு பிரிவு, கோவை மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்க கோவை பிரிவு மற்றும் ராவ் மருத்துவமனை ஆகியவை இணைந்து கோவையில் இரண்டு நாள் தேசிய மாநாட்டை யுவா ஐஏஜ் - எண்டோ இன்சைட் 2025 கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸில் துவங்கியது.
இதில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் அதிக ஈர்ப்பை ஏற்படுத்திய நேரடி அறுவைச் சிகிச்சை பயிலரங்கத்துடன் தொடங்கியது.இதில் ராவ் மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரியில் நடந்த அறுவைச் சிகிச்சைகள் ஒரே நேரத்தில் திரையில் ஒளிபரப்பப்பட்டன.
ஹிஸ்டரோஸ்கோபி,லேப்ராஸ்கோபிக் கருப்பை நீக்கம்,மயோமெக்டோமி, கருவுறுதலை மேம்படுத்தும் அறுவைச் சிகிச்சை போன்ற நுட்பமான செயல்முறைகள் பங்கேற்பாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கருத்தரங்கில் மேம்பட்ட லேப்ராஸ்கோபி,ஹிஸ்டரோஸ்கோபி பயிற்சிகள், ஐவிஎப் மற்றும் ஆர்ட் துறைகளுக்கான புதுமையான நடைமுறைகள் குறித்து விரிவுரைகள், அழகியல் மகளிர் மருத்துவ பயிலரங்கம் ஆகியவை இளம் மருத்துவர்களுக்கு வளமான கற்றல் வாய்ப்பாக அமைந்தன. இளம் மருத்துவர்களின் இலவச கட்டுரைப் போட்டியும் சிறப்பாக நடந்தது.
இரண்டாம் நாள் அமர்வில் ஐஏஜ் தலைவர் டாக்டர் கல்யாண் பர்மடே ரோபோக்களின் காலத்தில் லேப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார். ரோபாட்டிக்ஸ் வளர்ந்தாலும் அடிப்படை அறுவைச் சிகிச்சை திறன்கள் மிக அவசியம் என எடுத்துரைத்தார்.
நேரடி அறுவைச் சிகிச்சைகள், உயர்தர அறிவியல் அமர்வுகள், முன்னணி நிபுணர்களின் பங்களிப்பு ஆகியவற்றால் யுவா ஐஏஜ் எண்டோ இன்சைட் 2025 கோவையின் மருத்துவ துறையில் ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
-சீனி, போத்தனுர்.
Comments