கோவில்பட்டி அருகே வாகைத்தாவூரில் ரூ.6.50 லட்சத்தில் பயணியர் நிழற்குடை!!மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் திறந்து வைத்தார்
கோவில்பட்டி நவ 10:
கோவில்பட்டி அருகே வாகைத்தாவூரில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் திறந்து வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வாகைத்தாவூர் கிராமத்தில் பயணியர் நிழற்குடை கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.6.50 லட்சம் ஒதுக்கீடு செய்து பயணியர் நிழற்குடை கட்டுமான பணிகள் நடந்தன. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து திறப்பு விழா நடந்தது. இதையடுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் பயணியர் நிழற்குடை கல்வெட்டினை திறந்து வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் காளியப்பன், பஞ்சாயத்து துணைத் தலைவர் தங்கதுரை, வாகைத்தாவூர் ஊர் நாட்டாமை போத்திராஜ், முன்னாள் ராணுவ வீரர் துரைப்பாண்டியன், சங்கிலி பாண்டியன், ஆசூர் சொசைட்டி தலைவர் கிருஷ்ணன், மணிகண்டன், மற்றும் ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வாகைத்தாவூர் திமுக கிளைக் கழக செயலாளர் மாணிக்கம் சிறப்பாக செய்திருந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
- ராஜ்குமார்.
Comments