கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசித் தேரோட்டம்!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மதுரையில் மீனாட்சி அம்மன் அரசாட்சி செய்வதைப்போல, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் அம்பாளே அரசாட்சி செய்துவருகிறாள். கடந்த நவம்பர் 4-ம் தேதி ஐப்பசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 15-ம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று காலை நடைபெற்றது.
தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு,சுவாமி - அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரதீபாராதனை நடைபெற்றது. பிறகு, செண்பகவல்லி அம்பாள் – பூவனநாதசுவாமி திருத்தேரில் எழுந்தருளி காட்சியளிக்க, விசேஷ தீபாராதனை நடைபெற்றது. ‘’ ஓம் நமச்சிவாய.. சிவாய நம ஓம்..’’ என்ற கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்துத் தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது திருத்தேர்.
11-ம் நாள் திருவிழா, வரும் 14-ம் தேதி மதியம் 1 மணிக்கு செண்பகவல்லி அம்பாள் தபசு சப்பரத்தில் எழுந்தருள்கிறார். மாலை 6 மணிக்கு சுவாமி பூவனநாதர், ரிஷப வாகனத்தில் அம்பாளுக்கு தபசுக்காட்சி அளிக்கும் வைபவம் நடக்கிறது.
12-ம் நாள் திருவிழா, வரும் 15-ம் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்பாள் வீதியுலா வருதலும், இரவு 7 மணிக்கு சுவாமி – அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டினப் பிரவேசம் செல்லும் நிகழ்ச்சியுடன் ஐப்பசித் திருவிழா நிறைவு பெறும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
- ராஜ்குமார்.
Comments