தேசிய கார் கோப்பை பந்தயம்: கோவையில் சீறி பாய்ந்த கார்கள்..!

தேசிய கார் பந்தயம் போட்டியில் பெங்களூரு வீரர் கோப்பையை தட்டிச் சென்றார்..!

கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவே"யில் தேசிய அளவிலான கார் பந்தயம் 2 நாட்கள் நடைபெற்றது. 

இதில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, டெல்லி, மராட்டியம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். 

இதில் மிக முக்கிய பந்தயமான எல்.பி.ஜி. பார்முலா 4 பந்தயத்தில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த வீரர் துருவ் கோஸ்சுவாமி 19 நிமிடம், 58 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

ருகன் ஆல்வா 2-ம் இடம், தில்ஜித் 3-ம் இடம் பிடித்தனர்.

நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் புவன் பானு முதலிடம், பொள்ளாச்சியை சேர்ந்த லோகித்லிங்கேஷ் ரவி 2-ம் இடம், அபி ஜித்3-ம் இடம் பிடித்தனர். 

காண்டினென்டல் ஜி.டி. கோப்பைக்கான போட்டியில் ஜார்கிங் வர்ஷா முதலிடம், பிராயன் நிகோலஸ் 2-ம் இடம், சரண்குமார் 3-ம் இடம் பிடித்தனர். அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிள் வீரர்களின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இதை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments