ரவுண்ட் டேபிள் இந்தியா வாரத்தை கொண்டாடும் விதமாக பல்வேறு சமூக பணிகள் நடைபெற்றன!!

கோவை: ரவுண்ட் டேபிள் இந்தியா வாரத்தை கொண்டாடும் விதமாக கோவை சிட்டி ரவுண்ட் டேபிள் 31 மற்றும் லேடீஸ் சர்க்கிள் 16 சார்பில் பல்வேறு சமூக பணிகள் நடைபெற்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை சிட்டி ரவுண்ட் டேபிள் 31 மற்றும் கோவை சிட்டி லேடீஸ் சர்க்கிள் 16 ஆகிய அமைப்புகள் கடந்த 50 ஆண்டுகளாகச் சமூகத்திற்குப் பயனுள்ள சேவைத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றன. 

இந்த 2 அமைப்புகளும் இந்த ஆண்டு ரவுண்ட் டேபிள் இந்தியா வாரத்தை கொண்டாடும் விதமாக,  கோவை  சங்கர கண் மருத்துவமனையுடன் இணைந்து, நவம்பர் 11 அன்று கோட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 'புராஜெக்ட் ரெயின்போ' என்ற கண் பரிசோதனைத் திட்டத்தை நடத்தினர். குழந்தைகளிடையே அண்மைக் காலமாக அதிகரித்து வரும் மயோபியா எனும் கண் பாதிப்பைக் கண்டறியும் சேவைகள் இந்த ஆண்டு கூடுதலாகச் சேர்க்கப்பட்டு, கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாகக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.

வருடாந்திர தேசிய உறுப்பு தான தினத்தை (National Limb Donation Day) நினைவுகூரும் விதமாக, நவம்பர் 12 அன்று ஆர்.எஸ். புரம் செயற்கை உறுப்பு மையத்தில் (Artificial Limb Centre) கோவையின் அனைத்து ரவுண்ட் டேபிள் அமைப்புகளும் பங்கேற்றன. இந்த நிகழ்வில், சுமார் 200 செயற்கை உறுப்புகளுக்கான நிதி திரட்டப்பட்டதுடன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 15 பயனாளிகளுக்கு இலவசமாகச் செயற்கை கால்கள் வழங்கப்பட்டன.

ரவுண்ட் டேபிள் இந்தியா வாரத்தின் ஒரு பகுதியாக, வடகோவை மேம்பாலத்திற்கு அருகிலுள்ள அடையாளச் சின்னமான மணிக்கூண்டில் (Clock Tower Day) 'கிளாக் டவர் தினம்' கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுக்கு ஏரியா 7 தலைவர் கௌஷிக் ரகுநாத் மற்றும் ஏரியா 7 தலைவி மந்தாகினி துளசி ஆகியோர் தலைமை தாங்கி, இந்தியாவில் ரவுண்ட் டேபிள் அமைப்பு தொடங்கப்பட்டதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வாரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளைப் பற்றி எடுத்துரைத்தனர்.

ரவுண்ட் டேபிள் இந்தியா வாரச் செயல்பாடுகளை நிறைவு செய்யும் வகையில், கோவை சிட்டி ரவுண்ட் டேபிள் 31 மற்றும் கோவை சிட்டி லேடீஸ் சர்க்கிள் 16 அமைப்புகள், கங்கா மருத்துவமனையுடன் இணைந்து, சமீபத்தில் தாங்கள் தொடங்கிய சிறப்பான திட்டமான 'புராஜெக்ட் ஹீலிங் ஸ்டெப்ஸ்' (Project Healing Steps) திட்டத்தை மேலும் மேம்படுத்தின. எலும்பு குறைபாடுகளுடன் (Orthopaedic deformities) இருக்கும் சுமார் 40 ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஏற்கெனவே அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சையை இந்தத் திட்டம் எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் அவர்களின் இயக்கம் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments