சுற்றுச்சூழல் பாதிப்பு - அப்பகுதியில் குப்பைகள் குவிந்த வண்ணமாக உள்ளது!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கூழாங்கல் ஆற்றுப் பகுதியில் தினசரி வியாபாரிகள் கடைகள் நடத்தி வருகின்றனர். மாசுப் படும் அளவில் குப்பைகள் குவிந்த வண்ணமாக உள்ளது. சரியான பராமரிப்பு இன்றி கடைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்பகுதியில் நகராட்சி கடைகள் அமைத்தால் வால்பாறை நகராட்சிக்கு வருமானம் அதிகரிக்கும்.
இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு பாட்டில்களை உடைத்து ஆற்றுப் பகுதியில் செடிகளின் ஓரங்களில் போடுகிறார்கள். ஆற்றுக்குச் சென்று குளிக்கும் சுற்றுலாப் பயணிகளின் கால்களில் கண்ணாடி பாட்டில்கள் பட்டு காயம் படுகின்றது. மாசுப் படும் யூஸ் அண்ட் த்ரோ பொருட்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.
இதை கண்காணிக்க அப்பகுதியில் காவல் அதிகாரிகளையும் வனவிலங்கு அதிகாரிகளையும் பணியாற்ற வைக்க வேண்டும் என்றும் இதை கண்டும் காணாமல் செல்லும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி வரும் இயற்கையை நேசிக்கும் சுற்றுலா பயணிகள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையிலிருந்து
-திவ்யக்குமார்.
Comments