தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது!!
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆஞ்சநேயர் தியான ஆஞ்சநேயராக எழுந்தருளியுள்ளாா். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் நல்லமழை பெய்து விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் நலமாக வாழவேண்டியும் தியான ஆஞ்சநேயருக்கு சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பால், பன்னீர், தேன், தயிர், சந்தனம் உள்ளிட்ட 27வகையான சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலையால் சிறப்பு அலங்காரமும் மற்றும் மஹாபிரத்தியங்கிராதேவி, காலபைரவருக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.
Comments