தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் சீரமைப்பு பணிகள் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிரதிபெற்ற சிவன்ேகாவில், முத்தாரம்மன்கோவில், பத்திரகாளிஅம்மன் கோவில், மாாியம்மன் கோவில், சுந்தரவிநாயகா் கோவில் உள்ளிட்ட ஆன்மீக தளங்கள் நிறைந்த பகுதியில் தெப்பக்குளம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆண்டுக்கு ஓரு முறை தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெறும் கடந்த 24 ஆண்டுகாலமாக சீரமைப்பு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது அப்பகுதி நலன் கருதி மாநகராட்சி சாா்பில் 75 லட்சம் மதீப்பில் நீர் வீழ்ச்சியுடன் சிறியவா்கள் முதல் பொியவா்கள் வரை அமா்ந்து உலா வரும் வண்ண கலா் மீன்களை பாா்வையிடவும் பொழுதுபோக்கு நிறைவு செய்யும் வகையிலும் முழுமையாக மாா்பில் பதிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. 

இதற்கிடையில் தெப்பத்தில் உள்ள நீரை முழுமையாக வௌியேற்றி சில பணிகளை மேற்கொண்டதால் அப்பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாதைகள் சுமாா் 6 அடி வரை திடீரென கீழே இறங்கி விாிசல் ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பாரம் சாிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் மின்இனைப்புகள் துண்டிக்கப்பட்டன. 

இதனையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நோில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு மின்சாரத்துறை அதிகாாிகளை தொடா்பு கொண்டு துண்டிக்கப்பட்ட மின்இணைப்புகளை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்குவதற்கு விரைவான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்ட பின் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் பழமை மாறாமல் எப்படி இருந்ததோ அது போன்று நல்லமுறையில் பணிகள் நடைபெறும் அதற்கான உத்தரவுகளை சம்மந்தப்பட்டவர்களுக்கு கூறியுள்ளேன் என்றாா். 

ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மின்வாாிய உதவி பொறியாளார் நாகராஜன், உதவி செயற்பொறியாளர்கள் பிரேம், தமிழ்செல்வன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா்கள் செந்தில்குமாா், கந்தசாமி, மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட் மாாிமுத்து, உள்பட பலா் உடனிருந்தனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

- பரணி பாலா.

Comments