கந்தர்வ கோட்டை அருகே வாசிப்பு மன்றத்தின் சார்பில் சர்வதேச மனித உரிமை தினம் கடைபிடிப்பு!!

கந்தர்வக்கோட்டை டிச 10

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் சர்வதேச மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வாசிப்பு மன்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா  மனித உரிமைகள் தினம் குறித்து பேசும் போது

மனித உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று கொண்டாடப்படுகிறது. இது, 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூர்கிறது. 2025 இல், இது மனித உரிமைகள் பிரகடனத்தின் 77வது ஆண்டு ஆகும். மனிதர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை உலகெங்கிலும் ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் கொண்டாடப்படுகிறது.

1950 ஆம் ஆண்டில் இருந்து டிசம்பர் 10 ஆம் தேதி இந்த தினத்தை அனுசரிக்க ஐக்கிய நாடுகள் சபை அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டாடி வருகிறது. 

இந்த மனித உரிமைகள் தினத்தில், ஒவ்வொரு நபருக்கும் மனித உரிமைகள் எவ்வளவு அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் நீதி, சமத்துவம், அமைதி மற்றும் சுதந்திரத்தைத் தேடுவதற்கு அவற்றை ஒவ்வொரு நாளும் நமது திசைகாட்டியாகப் பயன்படுத்துவோம் என்று பேசினார். நிறைவாக ஆங்கில ஆசிரியை சிந்தியா நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Comments