தமிழின வேந்தர் பெ.ஜான்பாண்டியன் பிறந்தநாள் !!

தே.பாபு தலைமையில் கோவில்பட்டியில் உள்ள முக்கிய கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் பெ.ஜான்பாண்டியன் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோவில்பட்டி ஸ்ரீ பழனியண்டவர் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன்பின் ராஜிவ்நகர் முதியோர் இல்லத்தில் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு மாவட்ட செயலாளர் தே.பாபு தலைமையில் வழங்கினர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கம் சார்பாக கோவில்பட்டி பணிமனையில் கிளை நிர்வாகிகள் பட்டாசு வெடித்து தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர்.

பின்னர் நெல்லையில் நடைபெற்ற தலைவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தே.பாபு மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள்,தொழிற்சங்க கோவில்பட்டி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், தலைவர் ஜான் பாண்டியனுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் கனகராஜ், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சாமு, நகர தலைவர் பெருமாள்சாமி, ஒன்றிய செயலாளர் குட்டியப்பன், கழுகுமலை நகர செயலாளர் சக்திவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் அமுதவல்லி, நகர மகளிர் அணி செயலாளர் விமலா, கயத்தாறு ஒன்றிய இணை செயலாளர் முருகேசன், நகர இளைஞர் அணி செயலாளர் அய்யத்துரை, பொதுக்குழு உறுப்பினர் மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோவில்பட்டி பணிமனை போக்குவரத்து கழக தொழிற்சங்க கிளை செயலாளர் மகேந்திரன், வேல்முருகன் மகேஷ், செல்லதுரை, அரவிந்தன், சுந்தரமூர்த்தி, சுந்தரபாண்டியன், மாரியப்பன், அய்யாசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ராஜ்குமார், கோவில்பட்டி.

Comments