கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம்அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா  ஸ்டீபன் ஹாக்கிங்  வாழ்க்கை வரலாறு குறித்து பேசும் பொழுது;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 ஸ்டீபன் ஹாக்கிங் 1942, ஜனவரி 8 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். தந்தை ஃபிராங்க் மருத்துவர், தாய் இசபெல். இரண்டாம் உலகப்போரால் ஆக்ஸ்போர்டிற்குக் குடிபெயர்ந்தது குடும்பம். செயின்ட் ஆல்பன்ஸ் பள்ளியில் படித்தார் ஹாக்கிங். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளங்கலை முடித்தார்.

அண்டவியல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகமானது. எனவே முதுகலையை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார். ஹாக்கிங். நவீன அண்டவியலின் முக்கியமான ஆசிரியரோடு ஹாக்கிங்கின் ஆராய்ச்சி தொடர்ந்தது

அப்போதுதான் ஹாக்கிங் தசை சிதைவு நோய்க்கு உள்ளானார் . ஒவ்வொரு உறுப்பாகச் சிதைத்து அசையவிடாமல் செய்தது. மருத்துவர்கள் ஹாக்கிங்கிற்கு இரண்டு ஆண்டுகள் ஆயுள்காலம் நிர்ணயித்தனர். உறுப்புகள் செயலிழந்தாலும் மூளை நன்றாகச் செயல்படுகிறதே என்றாராம் ஹாக்கிங்ஸ். அந்த அளவுக்குத் தன்னம்பிக்கையும் மூளை பலமும் உள்ளவர். ஹாக்கிங்ஸ் 1966இல் கருந்துளை குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார்.

அண்டவியல் மீதான ஆர்வத்தால் பிரபஞ்ச உருவாக்கத்தில் சிறிய துகள்கள் குறித்து ஆராய்ந்தார். பெருவெடிப்புக் கொள்கையை ரோஜர் பென்ரோஸ் உடன் இணைந்து ஆராய்ச்சி செய்தார். எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்கள் இணைந்து அணுவை உருவாக்குகின்றன. நம்மைச் சுற்றி இருக்கும் பொருள்கள் அனைத்தும் இந்த மூன்று துகள்களின் இணைப்பு. அந்த மூன்று துகள்களையும் இணைக்கும் ஒட்டுப்பொருள் எது எனக் கண்டறிந்துவிட்டால் பிரபஞ்ச ரகசியத்தை அவிழ்த்துவிடலாம் என நினைத்தார் ஹாக்கிங்.

சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே, காலங்களைக் கடந்து பயணம் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதில் வெற்றிக்கான வழியும் இருக்கிறது என்பதை வாழ்ந்துகாட்டிய ஹாக்கிங், 2018, மார்ச் 14 அன்று மறைந்தார் என்று பேசினார். வானவில் மன்ற கருத்தாளர் தெய்வீக செல்வி எளிய அறிவியல் பரிசோதனைகளை செய்து காண்பித்தார். நிறைவாக ஆங்கில ஆசிரியை சிந்திய நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Comments