இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது!!

கோவை - 12-01-26 இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நலத்திட்ட உதவிகள்  ஆலம் பசுமை  பண்ணையில் உள்ள ஐ.ஜே.கே மண்டல அலுவலக வளாகத்தில்  நடைபெற்றது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்நிகழ்விற்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் மற்றும் இளைய வேந்தர் ரவி பச்சைமுத்து அவர்களின் வழிகாட்டுதலின்படி - மாநில இணைப் பொதுச் செயலாளர் திருமதி லீமாரோஸ் மார்ட்டின்  கலந்துகொண்டு சிறப்பித்தார்

இவ்விழாவில் சுமார் சுமார் 300-க்கும் மேற்பட்ட மகளிர்  பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என்று குலவை குரல் எழுப்பினார்கள். 

சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரிசி, பருப்பு, சமையல் ஆயில், நாட்டு சக்கரை, போர்வை போன்ற பொருள்கள் அடங்கிய நல உதவிகளை ஆயிரத்திற்கும்  மேற்பட்டோருக்கு  வழங்கி திருமதி லீமாரோஸ்மார்டின் அவர்கள் விழாப் பேருரை ஆற்றினார். 

அனைவருக்கும் சமபந்தி மதிய உணவு வழங்கப்பட்டது. விழா நிறைவாக கோலாட்டம், கும்மியாட்டம், உறியடி போன்ற சமுதாய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

இவ்விழாவில் ஐ.ஜே.கே"வின் மூத்த நிர்வாகிகள் வழக்கறிஞர் ராபின்சன், முத்துச்செல்வம், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட தலைவர் அந்தோணிசாமி, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி மாவட்டத் தலைவர் மணிமாறன், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி மாவட்ட தலைவர் ஈஸ்வரன், செயலாளர் பொற்காலம் ராஜா, வடக்கு சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் திருக்கண்ணன், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி மாவட்ட தலைவர் செபஸ்டின், ஜனார்த்தனன், மகளிர் அணி நிர்வாகிகள் திருமதி ஸ்டெல்லா, திருமதி குளோரி ஜான் பிரிட்டோ, திருமதி ராணி, திருமதி அமுதா, சேலம் ராணி, லெனின், பாஸ்டின் மற்றும் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments