குளத்தூர் அருகே சுற்றுலா வேனும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்!!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பள்ளாகுளத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான குருசாமி (40), தற்போது குளத்தூர் சுந்தரலிங்கம் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை குருசாமி, தனது சகோதரர் முனியசாமியின் மகன்களான முகிலரசன் (5), சுமித்ரன் (3), தனது சகோதரி முத்துலட்சுமி (48) மற்றும் ஒரு பணிப்பெண் ஆகியோருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் குளத்தூரிலிருந்து பள்ளாகுளத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கிழக்குக் கடற்கரைச் சாலையில் வைப்பாறு பாலம் அருகே வாகனம் சென்றபோது, எதிரே வந்த சுற்றுலா வேன் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குருசாமி உள்ளிட்ட ஐந்து பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளத்தூர் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வேன் ஓட்டுநரான தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்த பச்சைக்கிளி (55) என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.
Comments