கோவையில் மேஜிக் நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு!!

கோவையில் மேஜிக் நிகழ்ச்சியின் மூலம் உலக அமைதி, கோடை கால உடல்நலம் பாதுகாப்பு மற்றும் பள்ளி பொதுத் தேர்வு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்த நிகழ்வு பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது..

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் டிஜோ வர்கீஸ், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்து வருபவர்.பல்வேறு சமூகப் பணிகளுக்காக அவர் சமீபத்தில் புகழ்பெற்ற ஜே சி டேனியல் விருது மற்றும் ஆஸ்க்ர் ஆப் மேஜிக் விருதை பெற்றுள்ளார்.

இந்நிலையில் கோவை சுங்கம் பகுதியில், தற்போது சர்வதேச அளவில் நடைபெற்று வரும் இஸ்ரேல்–அமெரிக்கா–ஈரான் மோதல்களை கைவிட்டு, உலக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்தியும்,கோடை காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் தண்ணீர் குடித்து உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்து டிஜோ வர்கீஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் பள்ளி பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் பயப்படாமல் தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுத வேண்டும், மன அழுத்தத்தை சரியாக கையாள வேண்டும் என்பதையும் அவர் தனது மேஜிக் நிகழ்ச்சிகள் மூலம் சுவாரஸ்யமாக எடுத்துரைத்தார்.

கோவை சுங்கம் பகுதியில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மேஜிக் நிகழ்ச்சி, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களை வியப்பில் ஆழ்த்தியது. சமூகப் பொறுப்புணர்வை கலை வடிவில் கொண்டு சேர்த்த டிஜோ வர்கீஸின் முயற்சிகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Comments