தூத்துக்குடியில் விஜய் கட்சியை சேர்ந்த அஜிதா ஆக்னல் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்!!

தூத்துக்குடி கன்னியாகுமரிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் வந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி அஜிதா ஆக்னல் கனிமொழி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்ததால் பரபரப்பு தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை அங்கீகாரம் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடியை சேர்ந்தவர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி அஜிதா ஆக்னல் தமிழக வெற்றி கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி பணி ஆற்றி வந்த அஜிதா தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட  பதவி அளிக்காததால் பனையூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் காரை  மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வந்தார். ஆனால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அஜிதா ஆக்னலுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காமல் அவரது கல்லூரி நண்பர் ஸ்ரீநாத்திற்கு போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளார் இதன் காரணமாக தலைமை மீது அதிருப்தியில் அஜிதா ஆக்னல் இருந்து வந்தார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அஜிதா ஆக்னல் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் தங்களை திமுகவில்  இணைத்துக் கொண்டனர். அப்போது கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி உடனிருந்தாா். 

பின்னர் அவர் கூறுகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையை ஏற்று தற்போது திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியை சந்தித்து திமுகவில் இணைந்துள்ளேன் தமிழக வெற்றி கழகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைக்கவில்லை அதன் காரணமாக திமுகவில் இணைந்துள்ளதாக தெரிவித்தார் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் வந்துள்ள நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் திமுகவில் இணைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Comments