மோடி சொன்னது எப்படி சாத்தியமாகும்

 


 


 


 


 


மோடி சொன்னது எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு, பல விவசாயிகள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி, 'விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்' என்று கூறியுள்ளார். இந்நிலையில் உலக வர்த்தக அமைப்பான டபள்யூ.டி.ஓ (WTO)-வின் கூட்டத்தில், மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். டபள்யூ.டி.ஓ அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், அந்த அமைப்பின் விதிமுறைகளை புறந்தள்ளும் வகையில் உறுப்பினராக இருக்கும் நாடுகள் நடந்து கொண்டால், கேள்விகள் எழுப்பப்படும். அப்படித்தான் தற்போது இந்தியாவிடம் கேள்வி கேட்டுள்ளது டபள்யூ.டி.ஓ அமைப்பு மற்றும் மற்ற உறுப்பினர் நாடுகள். டபள்யூ.டி.ஓ அமைப்பின் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம், “பிரதமர் மோடி விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக சுமார் 25 டிரில்லியன் ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றும் கூறுகிறார். இது குறித்து விளக்குங்கள்.” என்று இந்தியாவிடம் கேள்வி கேட்டுள்ளது.


Comments