ஒற்றைத் தலைமை

மதுரை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று பேட்டி ஒன்றை தந்து தமிழக அரசியலை புரட்டி போட்டுள்ள ராஜன் செல்லப்பா, தற்போது ஆதரவாளர்களுடன் திடீர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இரு தினங்களாக ராஜன் செல்லப்பா அளித்த பேட்டிதான் விஸ்வரூபமெடுத்து வருகிறது. அதிமுகவுக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரில் இவர் யாரை சொல்கிறார் என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இதனால் அதிமுகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஆளுக்கு ஒரு கருத்தை முன்வைத்து வருகின்றனர். நடந்து முடிந்த தேர்தலில் தன்னுடைய மகன் ராஜ் சத்யன் சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் முன்பு தோல்வியை தழுவியதால் ராஜன் செல்லப்பா கடும் அதிர்ச்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேயர் பதவி மேலும் இவர் ஏற்கனவே மதுரையில் மேயராக இருந்ததால், தற்போது மகனின் தோல்வியை சரிக்கட்டும் விதமாக அதே பதவியை குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ராஜன் செல்லப்பா அதிமுக தலைமையிடம் கேட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்தன. முக்கிய ஆலோசனை இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ராஜன் செல்லப்பா முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் நடந்து வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் குறிப்பாக கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஒருவேளை இது உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டமாக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. எம்பி தேர்தலில் தோல்வியை அடுத்து, மேயர் பதவியும் கிடைக்காத பட்சத்தில், உள்ளாட்சி தேர்தலிலாவது விட்டதை பிடிக்க ராஜன் செல்லப்பா மிக தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. முக்கியத்துவம் ஒரு பக்கம் உள்ளாட்சி தேர்தல் மற்றொரு பக்கம், அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் கூட்டம் வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ராஜன் செல்லப்பாவின் இந்த ஆலோசனை கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. சலசலப்பு ராஜன் செல்லப்பா "ஒற்றை தலைமை" குறித்து அளித்த பரபரப்பு பேட்டி குறித்து, கட்சி நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்லக்கூடாது என அதிமுக தலைமை கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனால், இதனையும் மீறி ராஜன் செல்லப்பா ஆலோசனை கூட்டத்தில் அவரது நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசித்து வருகிறார்.


Comments