நாயுடுவை பழிவாங்கும் ஜெகன்மோகன்

சந்திரபாபு நாயுடுவை விடாமல் பழிவாங்கும் ஜெகன்மோகன் வீட்டை இடிக்க உத்தரவு 8 கோடி மதிப்பிலான பிரஜா வேதிகா சொகுசு பங்களா இடிக்கப்பட்டதை தொடர்ந்து, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் வீட்டையும் இடிக்க ஜெகன் மோன் ரெட்டி அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக, வீட்டை காலிசெய்யும் படி, நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஜெகன் மோன் ரெட்டி, முதலமைச்சராக பதவியேற்றத்தில் இருந்து, அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த போது, எதிர்ப்பு தெரிவித்த திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறார். அந்த வகையில், சந்திர பாபு நாயுடுக்கான பாதுகாப்பு குறைப்பு, வீடு இடிப்பு என நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தவிர, மக்கள் நல திட்டங்களை நாளுக்கு, நாள் தொடர்ந்து வருகிறது. தவிர, மக்கள் நல திட்டங்களை நாளுக்கு, நாள் அறிவித்து கலக்கி வருகிறார்.1884 ஆம் ஆண்டு நதி பாதுகாப்புச் சட்டத்தின், விதிமுறைகளின்படி, கிருஷ்ணா ஆற்றின் கரையோரம், 500 மீட்டருக்குள் எந்த கட்டுமான பணிகளும் நடைபெறக்கூடாது. ஆனால், கிருஷ்ணா நதிக் கரையிலிருந்து 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் சந்திரபாபு நாயுடுவின் வீடு உட்பட 28 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த கட்டிடங்களை இடிக்க ஆந்திரா அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முன்னதாக, அரசு அதிகாரிகள் கூட்டம் மற்றும் மக்களை சந்திப்பதற்காக சந்திர பாபு நாயுடு அரசு கட்டிய சொகுசு பங்களாவான 'பிரஜா வேதிகா' இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இந்தநிலையில், ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான விஜயசாய் ரெட்டி, சந்திரபாபு நாயுடு தங்கி உள்ள இல்லம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான விஜயசாய் ரெட்டி, சந்திரபாபு நாயுடு தங்கி உள்ள இல்லம் "சட்டவிரோதமானது". ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ளதால், இடிப்பது மட்டும் ஒரே வழி. உடனடியாக அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் கூறினார். படுதோல்விக்கு பிறகும் கட்சி பதவிகளில் நீடிக்கும் மூத்த தலைவர்கள். கொந்தளிப்பில் ராகுல் காந்தி சந்திரபாபுவின் வீட்டை இடிப்பது எப்படி அரசியல் பழிவாங்கும் செயல் ஆகும்?. அவர் வீட்டை சட்டவிரோதமாக கட்டியுள்ளார் என்பதைக் காட்ட எங்களிடம் ஆதாரம் உள்ளது. அதனால் தான் வீடு இடிக்கப்படுகிறது. இதே போல், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களும் விரைவில் இடிக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தணம் வாரியத் தலைவரும், ஒய்.எஸ்.ஆர் கட்சியின் மூத்த தலைவருமான சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகனின் அதிரடி நடவடிக்கைகளால், முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் வாடகைக்கு வீடு தேடி வருகிறார்.


Comments