நீட் தேர்வு 'மயிருக்கொள்கை பொங்கிய சூர்யா!

நீட் தேர்வை கடுமையாக நடிகர் சூர்யா சாடியுள்ளார் தேசிய கல்விக் கொல்கையையும் விமர்சித்துள்ளார் நடிகர் சிவகுமார் தனது அறக்கட்டளை மூலம் கடந்த 40 ஆண்டுகளாக, ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மற்றும் விளையாட்டு, கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த தமது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார் சிவகுமார். கடந்த 40 ஆண்டுகளாக தகுதியான மாணவர், மாணவிகளை அடையாளம் கண்டு தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். இந்த ஆண்டுக்கான, 'சிவகுமார் கல்வி அறக்கட்டளையின்' 40-ஆம் ஆண்டு நிகழ்வு, சென்னை வடபழனி பிரசாத் லேப்-ல் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- விகிதம் மொத்தம் ரூ. 2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம்) பரிசளிக்கப்பட்டது. இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும் ஏழை மாணவர்களுக்கான தாய் தமிழ்ப் பள்ளிக்கு 1 லட்சமும், முதல் தலைமுறையாக படிக்கும் ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும், வாழை அமைப்பிற்கு 1 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும், வேலூர் மாவட்டம் திருப்புக்கூழி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை, முன் மாதிரி பள்ளியாக செயல்பட தொடர்ந்து பணியாற்றி வரும் ஆசிரியர் செல்வகுமார் அவர்களுக்கும் மற்றும் அகரம் அறக்கட்டளையின் 'நமது பள்ளி' திட்டத்தின் திறன்மிகு வழி நடத்துதலுக்காக, அகரமுடன் இணைந்து செயலாற்றி வரும் மறைமலை நகர் அரசு மேல்நிலை பள்ளி, கருங்குழி அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அவர்களது தன்னலமில்லாத சமூகப் பங்களிப்பிற்காக விழா மேடையில் கெளரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்றார். பின்னர் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், "1979ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை' தொடர்ந்து, ப்ளஸ்-டூ தேர்வில் சிறந்த, அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்குபடுத்தி வருகிறது. 30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்கு பிறகு அகரம் பவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். "என்னைப் போல ஏழைக் குடும்பத்தில் "என்னைப் போல ஏழைக் குடும்பத்தில் பிறந்து நன்றாக படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போகவேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களது கவனம் சிதறாமல் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். என்று கூறினார். விழாவில் மாணவர்களுக்கு பரிசளித்து, மேலும் கல்விக்காக பாடுபடும் இரண்டு அமைப்புகளுக்கு நிதி உதவியும் அளித்தார். மேடை ஏறியபோதே கோபமான மனநிலையில் காணப்பட்டார். புதிய கல்வி கொள்கை வருகிறது. ஏன் இதுபற்றி இன்னும் யாரும் பேசவில்லை . ஏன் யாரும் பேச மறுக்கிறோம். கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கை மொத்தமாக அழிய இருக்கிறது. | ஒரு ஆசிரியர் மற்றும் 10 மாணவர்களுக்கு குறைவாக இருக்கும் அரசுப்பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் எங்கு போவார்கள். அகரம் பவுண்டேஷன் 10 வருடங்களாக தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவர்களை கவனித்து வருகிறது. 30 சதவீத பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமலே மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் வெளியில் வந்தவுடன் எப்படி நீட் நுழைவுத் தேர்வெல்லாம் எழுதச் சொல்வீர்கள். தரமான தகுதியான கல்வியை சமமாக தராமல் நுழைவுத்தேர்வு எல்லோருக்கும் ஒரே மாதிரி என்பது எப்படி நியாயமாகும். எல்லோருக்கும் ஒரே மாதிரி என்பது எப்படி நியாயமாகும். நகரில் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி என்று மாறி வருகிறது. நம் கண் முன்னே ஒரு முதல் தலைமுறை கல்வி கற்கும் மாணவர்கள் அழிகிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம். இது இந்தியா முழுக்க முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலம். இதைப்பற்றி எல்லோரும் பேச வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள் என அனைவரும் இணைய வேண்டும். இதற்காக அழுத்தமான குரல் தர வேண்டும்" என்றார். முன்னதாக பேசிக்கொண்டிருக்கும் போது புதிய கல்விக்கொள்கை பற்றி மயிருக் கல்விக்கொள்கை என்றார். உடனே, ”மன்னித்து கொள்ளுங்கள். கெட்ட வார்த்தை பேசியதற்கு கோபத்தில் வந்து விட்டது” என்று மன்னிப்பும் கேட்டார். 


Comments