அரளி பூச்செடி OPS

தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நடுவே அரளி பூச்செடி வளர்ப்பது ஏன்? தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நடுவே அரளிச் செடிகள் நடப்பட்டுள்ளது ஏன் என்பதற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார். தேசிய நெடுஞ்சாலை நடுவே அரளி பூச்செடி வளர்ப்பதால் எந்த பயனும் இல்லை என சங்கராபுரம் தொகுதியின் திமுக உறுப்பினர் உதயசூரியன் பேசினார். அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், சாலையின் நடுவே அரளி பூச்செடிகள் வளர்ப்பதன் மூலம், சாலைத் தடுப்புக்கு மறுசாலையில் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சமானது எதிர்திசையில் செல்லும் வாகன ஓட்டிகளை பாதிக்காத வண்ணம் தடுக்கப்படும் என்றார். இதுமட்டுமல்லாமல் வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடை அரளி பூச்செடி எடுத்துக் கொண்டு அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடும் என்பதால் தான் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் கொடுத்தார்.


Comments