பதவி விலகினார் குமாரசாமி!

அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்ய முடியாது என்ற சூழ்நிலை எழுந்துள்ள நிலையில், முதல்வர் பதவியை தியாகம் செய்வதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சட்டசபையில் அவர் ஆற்றிய உரை இதை எதிரொலிப்பதாக உள்ளது. நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்திருந்தார் குமாரசாமி. ஆனால், நேற்று பல்வேறு அலுவல்களும் திசை மாறி, மாறி மாறி நடைபெற்றதால், சட்டசபை இன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, இன்று பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா, குமாரசாமிக்கு நேற்று இரவு கடிதம் எழுதி இருந்தார். பிக் பாஸ் வீடாக மாறிய கர்நாடக சட்டசபை. பத்து பொருத்தமும் பக்காவா இருக்குது!வேறு பேச்சு வேண்டாம் இந்த நிலையில், இன்று காலை சட்டசபை தொடங்கியதும் வேறு பிரச்சனைகளை பேசிய காலம் தாழ்த்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் முயல்வார்கள், என்றுதான் பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால், எந்த ஒரு பிரச்சனையையும் பேசக்கூடாது, நேரடியாக நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் முதல்வர் உரையாற்றுவார் என்று அதிரடியாக சபாநாயகர் ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டார்.குமாரசாமி பேச்சுஇதையடுத்து, குமாரசாமி தனது உரையை ஆரம்பித்தார். அப்போதுதான், அரசியலுக்கு வந்த காலம் தொட்டு என்னென்ன நடைபெற்றது என்பது குறித்து நினைவுகூர்ந்தார். ஒரு கட்டத்தில், அவர் பேசிய பேச்சுக்கள், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு அவர் முடிவு செய்து விட்டதாகவே தெரிந்தது. நாற்காலி விருப்பம்குமாரசாமி கூறியதை பாருங்கள்: இந்த முதல்வர் பதவியின் மீதோ, நாற்காலியின் மீதோ எனக்கு மிகுந்த விருப்பம் கிடையாது. நான் எதிர்பாராமல் தான் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டேன். எனது தந்தை பிரதமராக பதவி வகித்தவர். டெல்லி செங்கோட்டையை பார்த்தது எங்கள் குடும்பம். எனவே எங்கள் குடும்பத்திற்கு அதிகார தாகம் இருப்பதாக கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.பாஜகவுக்கு மெசேஜ் இந்த முதல்வர் பதவி என்பது யாருக்கும் நிரந்தரமானது கிடையாது. உங்களுக்கும் கூட இது நிரந்தரம் கிடையாது. இன்று எம்எல்ஏக்களை தடுத்து வைத்து நீங்கள் ஆட்சியைக் கவிழ்க்கலாம். ஆனால் நாளை இது உங்களுக்கு ஆபத்தாக முடியும். இவ்வாறு குமாரசாமி தனது உரையின் போது குறிப்பிட்டார்.


Comments