தமிழ் ராக்கர்ஸ்


தமிழ் ராக்கர்ஸ் இணையதள முகவரியை முடக்க உத்தரவு புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதள முகவரிகளை முடக்க வேண்டும் என்று இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் தாக்கல் செய்த மனுவில், தமிழ் ராக்கர்ஸ், இ.இசட்டிவி., கேட் மூவிஸ், லைம்டொரன்ட்ஸ் போன்ற இணையதளங்கள், தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை வெளியிடுவதாகவும் இதனால் பெரும் இழப்பை சந்திப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, காப்புரிமை இருப்பதால் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத் தயாரிப்பு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்பவோ, இணையதளத்தில் வெளியிடவோ தடை விதித்து உத்தரவிட்டார். தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களின் முகவரிகளையும், அந்த இணையதளங்களின் பகிர்வுகளையும் இணைய சேவை நிறுவனங்கள் முடக்கவும் நீதிமன்றம் ஆணையிட்டது. 


Comments