தலைக்கவசம் தளபதியின் தளபதிகள் தலைமையில்..!

மிழகத்தில் தற்போது சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அளிக்கப்படும் அபராத கட்டணம் உயர்த்தப்பட்டு, தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த சாலை விதி முறைகளில் மிக முக்கியமானது தலை கவசம் அணிவது. இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் நடிகர் விஜயின் பிறந்த நாள் விழா தொடர்ச்சியாக, கோவை தளபதி மக்கள் இயக்கத்தின் சார்பில் தலை கவசம் அணியாதவர்களுக்கு E 1. காவல் நிலையத்தின் உதவியுடன் இலவச தலை கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் சம்பத் குமார் மற்றும் கோவை தளபதி மக்கள் இயக்க தலைவர் கோபி ஆகியோர் முதன்மை வகித்தனர். காவல் துறையினரின் வழக்கமான கண்காணிப்பு பணியில் இவர்கள் பங்குபெற்று தலை கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக சுமார் 45 தலை கவசம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக சிங்கை பகுதி செயலாளர் சாமி, தளபதி மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார், கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் படையப்பா செந்தில், பேரூர் கவின் மற்றும் கோவை தளபதி மக்கள் இயக்க துணை தலைவர் சரவணகுமார் துணை பொருளாளர் சேகர், துணை அமைப்பாளர் விஜயகுமார், தளபதி மக்கள் இயக்க செயற்குழு உறுப்பினர்கள் ரஞ்சன், முத்து, கார்த்தி, சவுரி பாலயம் ஜார்ஜ், முருகேஷ், காமாட்சிபுரம் சேகர், அரசூர் தினேஷ், கௌசிஷ், சிங்கை சரவணன், மல்லே கவுண்டபாளையம் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் செய்த சமூக சேவையை, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.


              -நிருபர்


             A.பீர்முகமது


Comments