விநாயக சதுர்த்தி. ஏன்! 3 நாள் கழித்து?

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பேஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும், ரூபாய் நோட்டுகளையும், இதன் போது வழங்கினர். இவ்விதம் இந்திய சுதந்திர போராட்டத்தில் மக்களை ஒன்றிக்கும் மிகப் பெரிய சக்தியாக கடவுள் விநாயகரும் , விநாயகர் சதுர்த்தியும் திகழ்ந்தது. அதன்பின் பாலகங்காதர திலகர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்ட உணர்வை எல்லாத் தரப்பு மக்களிடமும் விநாயகர் சதுர்த்தி விழாவின் மூலம் சென்றடையச் செய்தார். விநாயகரை ஆதிகாலம் முதலே வணங்கி வந்தாலும் அதனை மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் பிரபலப்படுத்தியவர் பாலகங்காதர திலகர்.1893 ஆம் ஆண்டிலிருந்து விநாயகர் சதுர்த்தி என்ற விழா எடுத்து விமர்சையாக கொண்டாட வழிவகுத்தார். அவரது விருப்பப்படி முதன்முதலாக பூனாவில் உள்ள விநாயகர் கோவிலில் தான் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடி முடித்த பிறகு அந்த சிலைகளை தண்ணீரில் கரைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அறிவியல் ரீதியாக, ஆன்மீகம் ரீதியாக என்னென்ன காரணங்கள் இருக்கிறது தெரியுமா? வாழ்க்கை ரகசியம் : உலகத்தில் தோன்றிய எல்லாருக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை உணர்த்துகிறார். மண்ணோடு மண்ணாகி புழுவாகி மீண்டும் நெளிவோம். எதுவுமே நிரந்தரமில்லை . என்பதை உணர்த்துகிறார். எது நிரந்தரம் : களிமண்ணில் உருவாகிறார் பிள்ளையார். அதாவது பஞ்சபூதத்தில் ஒன்றான மண். அதைப் பிரதிஷ்டை செய்யும்போது அதில் உயிர்ப்பு உருவாகிறது. கல்லிலும் உறைகிறார் கடவுள். அவரது சக்தியை நினைத்து உருகி வணங்குகிறோம். பின்னர், கொண்டாட்டமாய், பக்திப்பரவசத்துடன் விநாயகரை வழியனுப்புகிறோம். நம்மை விட்டு சென்றிடும் என்று பிரியம் காலம் தெரிந்து பிறகு நம் கண் முன்னால் தெரியும் நம்பிக்கைக்கு அளவீடே கிடையாது. நீரில் கரையும் போது : விநாயகரை நீரில் கரைக்கும் போது உயிர்ப்பில் இருந்து விடுபடுகிறான். பஞ்சபூதமான நீரில் கரைந்து மீண்டும் மண்ணாகவே மாறுகிறான். மாற்றம் இல்லாத மாற்றம். உறவைப் பேணத்தான் வேண்டும். ஆனால் அதுவே சாஸ்வதம் ஆகாது. அது மாயை. அறிவியல் காரணம் : ஆடிப்பெருக்கு அன்று வெள்ளம் ஏற்ப்பட்டு ஆற்றில் உள்ள மணலை எல்லாம் வெள்ள நீர் அடித்துச் சென்றிடும்.இதனால் அந்த இடத்தில் நீர் தங்காமல் நிலத்தடி நீர் குறைந்திடும். இதனை சமாளிக்கவே கெட்டியாக தங்கிடும் களிமண்ணினால் செய்த பிள்ளையாரை 3ஆம் நாள் மேலும் விநாயகர் சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டால் செல்வ செழிப்பு, காரிய வெற்றி, புத்திக்கூர்மை, மக்கட்பேறு, தொழில்வளம் ஆகியன பெருகும். உள்ள மேன்மை, உடல் ஆரோக்கியம் முதலியவைகள் கிட்டும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு சர்க்கரைப் பொங்கல், மோதகம், அவல் பொரி, சுண்டல், விளாம்பழம், அப்பம், கொழுக்கட்டை ஆகியவைகளைப் படைத்து வழிபட வேண்டும். விநாயகருக்கு படைக்கும் ஒவ்வொரு பொருளிலும் அர்த்தம் இருக்கிறது. மோதகம் படைப்பதன் காரணம், மோதும் மனங்கள் (அகங்கள்) இருக்கக்கூடாது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஏற்படாமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க மோதகத்தைப் படைக்கின்றோம். விளாம்பழத்தில் கடினமான ஓட்டிற்குள்ளே கனியிருக்கும். கடின உழைப்பினால் தான் கனிவான வாழ்க்கை கிடைக்கும் என்பதை உணர்த்தவே விளாம்பழத்தைப் படைக்கின்றோம். அவல் பொரி குசேலனை குபேரனாக்கிய பொருள். எனவே, அவல் பொரி படைப்பதால் மனம் மகிழும் வாழ்க்கை கிட்டும். கொய்யா பழத்தில் கடினமான கொட்டைகளுடன் இனிப்பான சதைப்பகுதி உள்ளது. அதே போல் வாழ்க்கையும், இனிப்பான சதைப் பகுதியைப் போன்று இன்பமும், கடினமான கொட்டைப்பகுதியைப் போன்று துன்பமும் நிறைந்திருக்கும் என்பதை உணர்த்துகிறது. விநாயகர் சதுர்த்திக்கு, ஆரம்ப காலத்தில் களிமண்ணால் விநாயகர் திருவுருவம் செய்து விநாயகர் சதுர்த்தி நாளிலிருந்து பத்து நாள் வரை ஊர் பொது இடத்தில் வைத்து அதற்கு இயற்கைப் பூக்கள் மற்றும் மூலிகைகளால் அர்ச்சனை செய்து சதுர்த்தசி (பத்தாவது) நாளில் திருவுருவத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று இறுதியில் ஊர் பொதுக்குடிநீர் குளத்தில் கரைத்து விடுவர். களிமண் குளத்து நீரில் உள்ள கலங்கலை (Turbid) ஈர்த்து குடிநீரைத் களிமண் குளத்து நீரில் உள்ள கலங்கலை (Turbid) ஈர்த்து குடிநீரைத் தெளிவடையச் செய்யும் தன்மையுள்ளது.மூலிகைகள் மற்றும் இயற்கைப் பூக்கள் குடிநீரில் கலந்து மருத்துவத் தன்மையை உண்டாக்கும் தன்மையுள்ளது. இக்குடிநீரானது ஆவணி மாத பருவகால மாற்றத்தால் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்கும் தன்மை வாய்ந்ததாக இருந்தது. ஆனால் தற்போது பாரிசு சாந்து (Plaster of Paris) வினால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜை செய்து இறுதியில் நீர் நிலைகளில் விடப்படும் போது, சிலைகளின் மீதுள்ள வண்ணப்பூச்சுவிலுள்ள காட்மியம், குரோமியம் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் நீரில் கரைந்து நோய்களைத் தோற்றுவிக்கிறது. மேலும் பாரிசு சாந்து நீரில் எளிதில் மட்காது, நீரின் தன்மையை மாற்றிவிடுகிறது. எனவே பாரிசு சாந்தினாலான சிலைகளைப் பயன்படுத்தாது களிமண்ணாலான சிலைகளைப் பயன்படுத்தி அதனை பூஜிக்க இயற்கைப் பூக்களை மட்டுமே பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசுபடாமலும் உடல்நலத்தையும் அதிலிருந்து காக்கலாம். பிள்ளையாரே முழுமுதற் தெய்வம் என்பதும், அவரே கணங் களின் அதிபதி என்பதும், அவர் அவதரித்த திருநாளே விநாயக சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது என்பதும் நமக்குத் தெரியும். இவைமட்டுமின்றி, பிள்ளையாரைப் பற்றி நாம் அவசியம் அறியவேண்டிய தகவல்கள் இன்னும் உண்டு. பிள்ளையாருக்கு எத்தனைப் பெயர்கள்? கணபதி என்ற சொல்லுக்குத் தேவகணங்களின் தலைவன் என்று பொருள். 'க' என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், 'ண' என்பது மோட்சம் பெறுவதையும், 'பதி' என்பது ஞான நெறியில் திளைத்துப் பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் 'மனோவாக்கினை கடந்த தலைவன்' என்றும் பொருள்கொள்ளலாம்! தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். விக்னங்களைப் போக்குபவர் ஆதலால் விக்னேஸ்வரர். கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி எனும் பெயர் கொண்டார். சாபத்தின் காரணமாக தனது பிரகாசத்தை படிப்படியாக இழக்க ஆரம்பித்தான் சந்திரன். இவனது துன்பம் தீர்க்க எண்ணிய விநாயகப் பெருமான், சந்திரனை தன் நெற்றியில் திலகமாக அணிந்து கொண்டாராம். இதனால், பாலசந்திர விநாயகர் எனும் திருநாமம் பெற்றார். ஒருமுறை, அக்னி பகவானும் சாபம் பெற்றார். அக்னியைக் காப்பாற்ற தனது காதுகளையே முறங்களாக்கி விசிறி, அக்னியின் வெப்பம் தணியாமல் இருக்க அருள் செய்தாராம் விக்னேஸ்வரர். இதனால் சூர்ப்பகர்ணர் என்று பெயர் கொண்டார். பரமேஸ்வரனால் வழங்கப்பட்ட பரசு ஆயுதத்தால் பூவுலகில் தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டார் பரசுராமர். இதன் பொருட்டு சிவனாருக்கு நன்றி சொல்ல திருக்கயிலாயம் வந்தார். வாயிலில் அவரைத் தடுத்து நிறுத்தினார் பிள்ளையார். அவரைப் பொருட்படுத்தாமல் உள்ளே நுழைய முயன்றார் பரசுராமர். இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது. அதன் உச்சகட்டமாக... விநாயகரை நோக்கி பரசு ஆயுதத்தை வீசினார் பரசுராமன். அந்த ஆயுதத்தால் தன்னை எதுவும் செய்துவிட முடியாது என்பது பிள்ளையாருக்குத் தெரியும். ஆனால், தந்தை அளித்த அந்த ஆயுதத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கருதினார் பிள்ளையார்; தமது இடது தந்தத்தால் அந்த ஆயுதத்தை எதிர்கொண்டார். தந்தம் முறிந்தது! இதன் மூலம் ஏக தந்தர் எனும் திருநாமத்தை ஏற்றார். இவை பிரமாண்ட புராணம் கூறும் தகவல்கள். இவை தவிர, பல்வேறு தலங்களில் பல்வேறு காரணப்பெயர்களும் உண்டு கணபதிக்கு. பிள்ளையாருக்கு முதலில் மோதகம் அதாவது கொழுக்கட்டை படைத்தது யார்? பிள்ளையாருக்கு முதன்முதலில் மோதகம் அதாவது கொழுக்கட்டை படைத்தது, வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி. சர்வவியாபியான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார்! அருந்ததி அண்டத்தை உணர்த்த, மாவினால் 'செப்பு' என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத்தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை, மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் என்னும் கொழுக்கட்டை. இப்படியும் சொல்லலாம்... இந்த உலகமே மோதகம்தான். உலகில் உள்ள ஒவ்வொரு படைப்பும் பூர்ணத்தைப் போன்று இனிமையானதுதான். நாமும் இனியவர்களாக, இனிய செயல் களையே செய்பவர்களாகத் திகழ்ந்தால், இறைவன் நம்மை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவான்! பிள்ளையாருக்கு எத்தனை தேவியர்? ஸித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது விநாயக புராணம். இவர்கள் மட்டுமல்ல... மோதை, பிர போதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்தினை, நந்தினி, காமதை ஆகியோரும் விநாயகரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன. மண் பிள்ளையாரும் மாவுப் பிள்ளையாரும்! ஐம்பொன் விக்கிரகங்களாக மட்டுமல்ல, மண்ணில் பிடித்து வைத்து வழிபட்டாலும் பரிபூரண பலன் தருவார் விநாயகர்.மண்ணால் செய்த விநாயகரை வழிபட, நற்பதவி கிட்டும். புற்றுமண் விநாயகரை வழிபட, லாபம் பெருகும். வெல்ல விநாயகர்- நன்மைகள் அதிகரிக்கச் செய்வார். உப்பு விநாயகர்- எதிரிகளை வெல்லும் வல்லமை தருவார். வெள்ளெருக்கு விநாயகர்- செல்வம் பெருக அருள்வார். கல் விநாயகரை வழிபட்டால், சகல நலன்களும் கிட்டும். மாவினால் செய்த விநாயகரை வழிபட, அனைத்துக் காரியங் களிலும் வெற்றி பெறலாம். பிள்ளையாரைப் போற்றும் புராணங்கள் முத்கல புராணம், சிவ புராணம், கந்த புராணம், கணேச புராணம், மச்ச புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பத்ம புரணம் ஆகிய புராணங்களும், ரிக் வேதம், சுக்ர நீதி, சுப்பிர பேதம், அபிதான கோசம் முதலான ஞான நூல்களும் விநாயகரைப் போற்றுகின்றன. பிள்ளையாரை அர்ச்சிக்க 21 இலைகள்! விநாயக சதுர்த்தி அன்று 21 பத்ரங்களால் (இலை) பிள்ளை யாரை அர்ச்சித்து வழிபடுதல் விசேஷம். அவை: முல்லை , கரிசலாங்கண்ணி, வில்வம், ஊமத்தை, இலந்தை, வெள் ளருகம்புல், துளசி, வன்னி, நாயுருவி, கண்டங்கத்திரி, சுருளி, எருக்கு, மருதை, விஷ்ணு கிராந்தி, மாதுளை, தேவதாரூ, மருவு, அரசு, ஜாதிமல்லிகை, தாழை, அகத்திக் கீரை. வெள்ளிக் கிழமை, விநாயக சதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தி ஆகிய தினங்கள் பிள்ளையாரை வழிபட உகந்த தினங்கள். இந்த தினங்களில் சிரத்தையுடன் விரதம் இருந்து பிள்ளையாரை வழிபட்டால், நினைத்ததை அடைந்து நீடூழி வாழலாம். பிள்ளையார் சுழி! வியாச பகவானின் மகாபாரதத்தை எழுத்திலே வடித்த முதல் எழுத்தாளன் விநாயகர். ஆகவேதான், எதையும் எழுதுமுன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறோம் என்பார்கள். . வைணவ ஆலயங்களான திருவரங்கம் கோயிலில் விக்னபதி, திருவல்லிக்கேணியில் வெண்ணெய் விநாயகர், அழகர் கோயிலில் தும்பிக்கை ஆழ்வாராகத் திகழ்கிறார் பிள்ளையார். சிதறு தேங்காய் எதற்கு? வித்யுன்மாலி, தாருகாக்ஷன், கமலாக்ஷன் ஆகிய அசுரர்களையும் அவர்களின் கோட்டைகளையும் சிவனார் அழிக்கப் புறப்பட்டபோது, தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது. விநாயகரை வேண்டிக் கொள்ளாமல் புறப்பட்டதால் ஏற்பட்ட இடர் இது என்பதை உணர்ந்த ஈசன், கணபதியை எண்ணினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, முக்கண்ணனையே தனக்குக் காணிக்கையாகத் தர வேண்டும் என்றார் கணபதி. எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்குப் படைத்தருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது. உச்சிப்பிள்ளையார் நாம் வாழ்வது பூவுலகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறும். இந்த மூன்றையும் மும்மண்டலங்கள் என்றும், மூவுலகங்கள் என்றும் சிறப்பிக்கிறோம். இந்த மூன்றுக்கும் முழுமுதற் தெய்வமாகத் திகழ்பவர் கணபதி. ஞானநூல்களெல்லாம் அவரை உச்சிப் பிள்ளையார், மகா கணபதி, பாதாள கணபதி என்ற மூன்று நிலைகளில் வைத்து போற்றுகின்றன. ஆலயங்களில் மகா கணபதியாக வழிபடும் பிள்ளையாரை, மலை முகட்டிலும் உச்சியிலும் வைத்து உச்சிப்பிள்ளையாராகவும், பள்ளத்தில் சந்நிதி அமைத்து பாதாள விநாயகர் என்றும் அன்பர்கள் வழிபடுகின்றனர். சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நாமம் பல தத்துவம் ஒன்று! வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப் விநாயகர், சித்தி புத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன். விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது. இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை! வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம். பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா! என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம். இவ்வாறு ஆண்டுதோறும் நாடெங்கும், ஏன் உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.


M.சுரேஷ்குமார்


நிருபர், பொள்ளாச்சி.


Comments